துல்லியமாக காய் நகர்த்திய பிரதமர் மோடி அரசு.. ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வியக்கவைக்கும் மாற்றங்கள்
ஸ்ரீநகர்: மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, 'பூமியில் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீர் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டு வருகிறது. பாதுகாப்பு ரீதியாக வலிமை அடைந்து வரும் ஜம்மு காஷ்மீர், சீரான முன்னேற்றத்தையும் பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அமைதியை மீட்டெடுப்பதற்கும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல பணிகள் அங்கே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மக்கள் இடையே ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் ஏற்ற வகையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை ஜம்மு காஷ்மீர் கண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை பிரதமர் மோடியின் அரசு ஏற்படுத்தி உள்ளது. அவை என்னென்ன.. வாருங்கள் பார்க்கலாம்!

ஜம்மு காஷ்மீர் - பூமியின் சொர்க்கம்: பல ஆண்டுகளாக , ஜம்மு மற்றும் காஷ்மீர் அதன் அழகிய, ரம்மியமான நிலப்பரப்புகள், கலாச்சார செழுமை, வானிலை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், ஜம்மு காஷ்மீர் பல வருடங்களாக தீவிரவாத தாக்குதல்கள், ஊடுருவல்கள், மோதல்களால் பாதிக்கப்பட்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீரை 'பூமியின் சொர்க்கம்' என்று அதன் பழைய புகழுக்கு மீட்டெடுப்பதில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பழைய நிலைக்கு ஜம்மு காஷ்மீரை கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இடையே ஜம்மு காஷ்மீர் குறித்த புதிய பிம்பத்தை ஏற்படுத்தி, அந்த பகுதிக்கு மோடியின் அரசு புத்துயிர் அளித்துள்ளது. புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் இணைப்புகளின் மூலம் அங்கே சுற்றுலா மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உள்நாட்டு மக்கள் வெளிநாட்டு மக்கள் எளிதாக காண்பதற்கான கூடுதல் வசதிகள், பாதுகாப்புகள் பிரதமர் மோடியின் அரசு மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதன் விளைவாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீரின் அமைதி, மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி மேற்கொண்ட பணிகள்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அணுகுமுறை இதற்கு முன்பு இருந்த அரசுகளை விட சிறப்பானது ஆகும். அதன் வளர்ச்சி, அமைதியை கவனத்தில் கொண்டு மோடி தொடர்ந்து கவனமாக காய்களை நகர்த்தி வந்தார்.
இதை மனதில் வைத்தே ஆகஸ்ட் 2019 இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக்கின் அமைதி மற்றும் வளர்ச்சியில் இது பெரிய பங்காற்றியது. அதோடு இந்திய பாதுகாப்பில் இந்த நடவடிக்கை வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நடவடிக்கை ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைத்தது. ஜம்மு காஷ்மீரில் கூடுதல் முதலீடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் மூவர்ணக் கொடி ஏற்படுவதை சாத்தியமாகியது பிரதமர் மோடியின் அரசே. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை காத்ததில் பெரும்பங்கு மோடியின் இந்த நடவடிக்கைக்கு உண்டு.

இந்தச் செயல், மக்களிடையே அளப்பரிய மகிழ்ச்சியை, பெருமை உணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு, அதன் ஒருமைப்பாடு மற்றும் இந்தியாவின் வலிமை ஆகியவற்றை உலகிற்கும் பறைசாற்றியது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மட்டுமே இது போன்ற உறுதியான நடவடிக்கைகள் சாத்தியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள் மற்றும் தொழில்துறை மண்டலங்கள் அங்கே அமைக்கப்பட்டு உள்ளன.
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவது போன்ற அதிரடி நடவடிக்கைளை மோடி அரசு இங்கே மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அங்கே பாதுகாப்பு உயர்த்தப்பட்டு, தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
மேம்படுத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று சட்டம் ஒழுங்கில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம்.
ஒரு காலத்தில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில், தற்போது மோதல்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. தேசிய பாதுகாப்பில் அரசின் வலுவான நிலைப்பாடு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் அசைக்க முடியாத நடவடிக்கைகளால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை சிறப்பான செயல்பாடுகள் காரணமாக இங்கே தீவிரவாத நெட்வொர்க்குகள் ஒடுக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக அங்கே சுற்றுலாவும் அதிகரித்தது.

அங்கே பாதுகாப்பு உயர்த்தப்பட்டதன் மூலம்.. அங்கே வாழும் மக்களின் வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் மீட்டெடுத்துள்ளது. பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பான சுற்றுலா அங்கே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் மூலம் வரக்கூடிய வருவாய் அங்கே முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. அழகிய பள்ளத்தாக்குகள், அமைதியான ஏரிகள் மற்றும் கம்பீரமான மலைகள் மீண்டும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் இன்றி.. இதை மக்கள் மகிழ்ச்சியாக கண்டுகளிக்க மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம். இதனால் ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரமும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலும் - ஜம்மு காஷ்மீர் ஜனநாயகமும்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் ஜம்மு காஷ்மீரின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். பல ஆண்டுகால அரசியல் ஸ்திரமின்மைக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல்கள் அங்கே வலுவாக இருக்கும் ஜனநாயகத்தை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
இந்தத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக மத்திய பாஜக அரசு இந்த தேர்தலை முன்னெடுத்தது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க விரும்புகிறார்கள், இங்கே மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதற்கு அங்கே நடந்த தேர்தலே பெரிய சான்று ஆகும். பிரதமர் மோடி அரசு இங்கே தொடர்ந்து மேற்கொண்டு வந்த பணிகளே இதை சாத்தியம் ஆக்கியது.
முடிவுரை: பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு உயர்ந்து இருப்பதும், சுற்றுலா அதிகரித்து இருப்பதும், மக்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொடர்ந்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் கவனமான திட்டமிடல், துல்லியமான செயல்பாடுகளே இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆகும்!












Click it and Unblock the Notifications