மோடி டிரெஸ்ஸை பார்த்தீங்களா? படு மோசமாக கமெண்ட்! மன்னிப்பு கேட்ட திரிணாமுல் எம்எல்ஏ! ஆனால் ட்விஸ்ட்
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி பெண் போல உடை அணிந்ததாக விமர்சனம் செய்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கீர்த்தி ஆசாத், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும், அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் மேலும் கொதித்துப் போன பாஜகவினர் கீர்த்தி ஆசாத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்துவிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது கீர்த்தி ஆசாத்தின் இறுமாப்பை காட்டுவதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர்.

"பெண் போன்று உடை"
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வடகிழங்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, மேகாலயா சென்ற மோடி அங்குள்ள பழங்குடி மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பழங்குடியினரின் உடையை அணிந்து மோடி கலந்துகொண்டார். இந்த புகைப்படத்தை திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "பிரதமர் பெண் போல உடை அணிந்திருக்கிறார்" என கிண்டலான தொனியில் விமர்சித்தார்.

பாஜக கண்டனம்
இதனிடையே, கீர்த்தி ஆசாத்தின் இந்த விமர்சனத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், "பிரதமர் அணிந்திருந்த உடையை பெண்ணை போன்று இருக்கிறது எனக் கூறி மேகாலயா கலாச்சாரத்தை திரிணாமூல் காங்கிரஸ் அவமதித்திருக்கிறது. மேலும், மேகாலயா பழங்குடியின மக்களின் மகிழ்ச்சிக்காக அவர்களின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடியையும் திரிணமூல் காங்கிரஸ் இழிவுப்படுத்தி இருக்கிறது. இதற்காக அக்கட்சி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

கீர்த்தி ஆசாத் மன்னிப்பு
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கீர்த்தி ஆசாத் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறுகையில், "மேகாலயா மீதும், அம்மாநில மக்கள் மீதும் மிகுந்த மரியாதையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது. எனது சமீபத்திய கருத்து மேகாலயா மக்களை புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள பழங்குடி மக்கள் மீதும், அவர்கள் கலாச்சாரங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதையை நான் வைத்திருக்கிறேன்" என அவர் கூறினார்.

பாஜகவினர் மேலும் கொதிப்பு
இந்நிலையில், பிரதமரை விமர்சனம் செய்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்காத கீர்த்தி ஆசாத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர்கள் சிலர் கூறுகையில், "ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் விமர்சிக்கிறார். பிரதமர் அணிந்திருக்கும் பழங்குடியினரின் உடையை பெண் உடை என கிண்டல் செய்கிறார். ஆனால், இதற்காக பிரதமரிடம் அவர் மன்னிப்பு கேட்காமல் பழங்குடியின மக்களிடம் மட்டும் மன்னிப்பு கேட்கிறார். இது, பிரதமரை மேலும் அவமதிக்கும் செயல். பிரதமரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் திரிணமூல் காங்கிரஸை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications