திரிபுரா முதல்வர் மாணிக் சாகா வெற்றி.. ஜஸ்ட் மிஸ்.. அடுத்தடுத்து நடத்த திருப்பங்கள்
திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திரிபுரா முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியிலிருந்து வென்றுள்ளார். முதல்வர மாணிக் சஹா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
முன்னதாக தேர்தலை மனதில் வைத்து திரிபுரா முதல்வராக இருந்த பிப்லாப் டெப் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் கடந்த ஆண்டு மாணிக் சாகா திரிபுரா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரிபுரா தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் இறங்கின.

காங்கிரஸ் கட்சி
இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. திரிபுரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தேபர்மாவின் திப்ரா மோத்தா கட்சி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் களம் இறங்கின.

முன்னணி
இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை இடமான 31 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது.

மாணிக் சாகா
இதனிடையே திரிபுரா சட்டசபைக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட போது, மாணிக் சாகா திரிபுரா சுந்தரி மா கோயிலுக்கு சென்று பக்தியுடன் வழிப்பட்டார் அவருடன் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ராவும் இருந்தார். இந்நிலையில் முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியில் வென்றுள்ளார். முதல்வர் மாணிக் சாகா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கோரிக்கை ஏற்பு
திப்ரா மோத்தா கட்சி இந்த தேர்தலில் 13 இடங்களில் வென்ற நிலையில் திப்ரா மோத்தாவின் தனிமாநில கோரிக்கையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயாராக உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. திரிபுரா பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரபோர்டி இந்த தகவலை தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications