"லேசாக உரசிய மின்கம்பம்.." திரிபுரா ஜகந்நாதர் ரத யாத்திரையில் ஷாக் விபத்து! 6 பேர் உயிரிழப்பு
அகர்தலா: திரிபுராவில் ஜகந்நாத் ரத யாத்திரையில், மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவில் பல்வேறு மத நிகழ்வுகளின் போதும் தேர் திருவிழா நடப்பது வழக்கமாகவே இருக்கும். கோயிலைச் சுற்றி இருக்கும் முக்கிய வீதிகளின் வழியாகத் தேர் பவனி வரும். இதனை அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஆர்வமாகப் பார்த்து ரசிப்பார்கள்.
நமது நாட்டில் பல தேர் திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்று இருக்கும். அதேநேரம் சில நேரங்களில் தேர் திருவிழாக்களின் போது மிக மோசமான விபத்துகளும் நடந்துள்ளன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது திரிபுரா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஷாக் விபத்து: திரிபுரா உனகோடி மாவட்டத்தில் இன்று ஜகந்நாத் ரத யாத்திரை நடைபெற்றது. "உல்டோ ரத்" என்ற இந்த ரத யாத்திரையில் இந்து கடவுளான ஜெகநாதர் உள்ளிட்டோர் தேரில் பவனி வந்தனர். நமது தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தேர்கள் மரத்தால் தான் செய்யப்பட்டிருக்கும் ஆனால், இந்த ரத யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட தேர் இரும்பினால் செய்யப்பட்டதாக இருந்தது. மேலும், அதில் மிக சிறப்பான அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
அப்போது அந்த தேர் எதிர்பாராத விதமாக மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது. இதனால் அதில் அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உயிரிழப்பு: அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். தேரின் மேற்பகுதி எப்படி மின் கம்பியில் உரசியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்குத் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி: அதேபோல பிரதமர் மோடியும் இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த அசம்பாவிதம் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது" என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications