குடியரசு தினத்தன்று 'சுதந்திர தின' வாழ்த்து.. என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களேம்மா...!
அகர்தலா: குடியரசு தினத்தன்று திரிபுரா மாநில அமைச்சர் பிஜிதா நாத் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திரிபுரா மாநில சமூக நலம் மற்றும் சமூக கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பிஜிதா நாத். அவர் தர்மாநகரில் உள்ள பிபிஐ மைதானத்தில் நடந்த 67வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
67வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தினத்தில் நாட்டுக்காக போராடியவர்களின் தியாகத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
அவர் இது போன்று முன்பும் கூட சில முறை தவறுதலாக பேசியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நினைவுகூர்ந்தவர் தான் இந்த பிஜிதா என திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிராஜித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அடிப்படை அறிவு கூட இல்லாத பிஜிதா சமூக நலம், சமூக கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராக இருக்க அனுமதிக்கவே கூடாது என்று பாஜக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
