For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன்...தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஐதராபாத் : நடிகர் விவேக், நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற, க்ரீன் கலாம் என்ற அமைப்பை விவேக் உருவாக்கினார். இந்த திட்டத்தின் கீழ் விவேக் இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

நின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்?.. சிம்ஸ் டாக்டர்நின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்?.. சிம்ஸ் டாக்டர்

 நான் நிறைவேற்றுவேன்

நான் நிறைவேற்றுவேன்

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி., சந்தோஷ் குமார், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற விவேக்கின் கனவை தான் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். க்ரீன் கலாம் திட்டத்தை தான் முழுமை அடைய செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

க்ரீன் கலாமை நான் தொடர்வேன்

க்ரீன் கலாமை நான் தொடர்வேன்

இது பற்றி சந்தோஷ் குமார் தனது ட்வீட்டில், திரு.விவேக்கின் லட்சியம் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பது. அவர் ஏற்கனவே 32.5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். க்ரீன் கலாம் திட்டத்தின் மீதமுள்ள இலக்கை தனிப்பட்ட முறையில் நான் நிறைவேற்ற உள்ளேன்.

விவேக்கிற்கு சமர்ப்பணம்

க்ரீன் இந்தியா சேலஞ்ச் இயக்கத்தின் கீழ், இந்த பணிகள் செய்து முடிக்கப்படும். அதனை விக்வேக்கிற்காக நான் சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். விவேக்கின் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் கனவை பிரதமர் மோடியும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். சந்தோஷ் குமாரும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் திட்டத்தின் கீழ், பல மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

விவேக்கின் ரசிகை ஸ்ரீதேவி

விவேக்கின் ரசிகை ஸ்ரீதேவி

59 வயதாகும் விவேக் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவி, விவேக்கின் மிகப் பெரிய ரசிகை என குறிப்பிட்டுள்ளார்.

English summary
TRS MP Santosh Kumar has declared that he will be completing the unfinished Green Kalam project, under which Vivek had planted 32.5 lakh saplings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X