For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலால், இறக்குமதி வரியில் மாற்றம்... டிவி, ஆடம்பர கார், சிகரெட்டின் விலை ஏறுகிறது!

பட்ஜெட்டில் இறக்குமதி மற்றும் கலால் வரியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால் டிவி, ஸ்மார்ட்வாட்ச், ஆடம்பர கார் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    டிவி, மொபைல் போன் வாங்க திட்டம் போட்டவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்- வீடியோ

    டெல்லி: பட்ஜெட் அறிவிப்பிற்குப் பிறகு எல்இடி/எல்சிடி டிவி, மொபைல் போன், ஆடம்பர கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஏனெனில் கலால் மற்றும் இறக்குமதி வரி அதிகரிப்பால் இவற்றின் விலை அதிகரிக்க உள்ளது.

    லோக்சபையில் இன்று மத்திய பட்ஜெட் 2018ஐ நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார். மத்திய அரசு அறிவித்திருந்தது போல இந்த பட்ஜெட்டில் கலால் மற்றும இறக்குமதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சில பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.

    https://tamil.oneindia.com/news/india/tv-luxury-cars-turns-costlier-after-budget-2018-310121.html

    பட்ஜெட் அறிவிப்பின் படி இறக்குமதி வரி உயர்வால் செல்போன்களின் விலையானது 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கல்விக்கான செஸ் வரியும் 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    பட்ஜெட்டின் படி எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது என்பதை பார்க்கலாம் :

    விலை அதிகரிக்கும் பொருட்கள்:

    கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்
    செல்போன்கள்
    வெள்ளி
    தங்கம்
    காய்கறி, பழச்சாறு
    சன்கிளாஸ்கள்
    வாசனை திரவியங்கள்
    சன்ஸ்கிரீன், சன்டேன், மெனிக்யூர், பெடிக்யூர் தயாரிப்பு பொருட்கள்
    பல் ஆரோக்கியம் சார்ந்த கொருட்கள்
    ப்ரீ ஷேவ், ஷேவிங் அல்லது ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள்
    டியோடரன்ட்டுகள்
    காலணிகள்
    இமிடேஷன் நகைகள்
    ஸ்மார்ட் வாட்ச்கள்
    எல்சிடி/எல்இடி டிவிகள்
    ஃபர்னிச்சர்கள்
    மேட்ரஸ்கள்
    விளக்குகள்
    கைக்கடிகாரங்கள், பாக்கெட் வாட்ச்கள் மற்றும் கடிகாரங்கள்
    ட்ரைசைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், பெடல் கார்கள்,
    வீடியோ கேம்கள்
    சிகரெட் மற்றும் லைட்டர்கள்
    சமையலுக்கு பயன்படுத்தும் ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய்
    லேப்டாப்கள்

    எந்தெந்த பொருட்களின் விலை குறையும்:

    வறுக்கப்படாத முந்திரிக்கொட்டைகள்
    சோலார் கிளாஸ்கள்
    காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள்
    பால் ஸ்க்ரூ உள்ளிட்ட பொருட்கள்
    ஆரோக்கியம் சார்ந்த சேவைகள்

    English summary
    Due to change in excise and Customs duty LCD/LED TVs, luxury cars, Smart watches turning coslier whereas few items only will turn cheaper after Budget 2018 announcements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X