'ப்ளைட்' டாய்லெட்டில் 'தம்' அடித்த இருவர் கைது! வார்னிங் சிஸ்டத்தை செக் செய்ததாக பல்டி!!
டெல்லி: ஓடும் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என பரிசோதிக்கவே புகைபிடித்ததாக இருவரும் கூறியுள்ளனர்.
மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் உண்டு.. விமானத்தில் ஏறும்போது கூட தீப்பெட்டியுடன்தான் சென்றேன். ஆனால் அமைச்சராவதற்கு முன்பு வரை அதை அனுமதிக்கமாட்டார்கள். தற்போது என்னை யாரும் தடுப்பதில்லை.. வழக்கம்போல லைட்டர் அல்லது தீப்பெட்டியுடன் செல்கிறேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

தற்போது பயணிகள் இருவர் ஓடும் விமானத்தில் புகைபிடித்து சிக்கியிருக்கின்றனர். அஸ்ஸாமின் குவஹாத்தியில் இருந்து ஏப்ரல் 8-ந் தேதியன்று டெல்லி வந்த விமானத்தில் வினய்குமார் (வயது 29), அபிலாஷ் சுனில் (வயது 26) ஆகிய இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் சோதனைகளின் போது இருவரும் எப்படியோ தீப்பெட்டியை மறைத்துவிட்டனர்.
பின்னர் விமானம் பறந்து கொண்டிருந்த போது இருவரும் கழிவறைக்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளனர். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் இருவரையும் தடுத்து வைத்தனர்.
பின்னர் இருவர் குறித்தும் டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தில் தீ விபத்து குறித்த எச்சரிக்கை கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதிக்கவே புகைபிடித்ததாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால் இதை நிராகரித்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
முதல் முறையாக விமானத்தில் புகைபிடித்த காரணத்துக்காக டெல்லி போலீசார் இருவரையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் ரூ1 லட்சம் அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்.
ஏன் இந்த வேண்டாத வேலை?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications