ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் அதிரடி.. பதுங்கி தாக்கிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பாரத் கலான் - குண்ட் மொஹல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், என்கவுண்டர் நடந்த அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் துப்பாக்கி சண்டையின் முடிவில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 230 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . அதே சமயம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் 225 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications