For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹபீஸ் சயீத்துடன் சந்திப்பு: வைதிக் மீது தேசத் துரோக வழக்குகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

Two sedition cases filed against Vaidik for meeting Hafiz Saeed
டெல்லி: மும்பை தாக்குதலின் மூளையான பாகிஸ்தானில் ஜமா உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தை சந்தித்த பத்திரிகையாளர் வைதிக்கை தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யக் கோரி 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யோகா குரு பாபா ராம்தேவின் நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான வைதிக், லாகூரில் ஹபீஸ் சயீத்தை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து தொடர்கிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நீதிமன்றத்தில் தேசத் துரோக பிரிவான 124ஏ மற்றும் 132ன் கீழ் வைதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல் வாரணாசியிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சந்திததன் மூலம், வைதிக் தேச துரோகக் குற்றம் புரிந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Two separate cases have been filed in courts - in Indore and in Varanasi - against yoga guru Ramdev's aide Ved Pratap Vaidik for meeting Pakistani terrorist Hafiz Saeed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X