டூர் போன இடத்தில் கோரச் சம்பவம்! மூணாறு அருகே விபத்தில் நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் பலி!
மூணாறு: மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் எக்கோ பாயின்ட் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், 3 ஆசிரியர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் குண்டலா அணையை பார்வையிடச் செல்லும் வழியில் அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.

மூணாறு மலைப் பகுதிக்கு உட்பட்ட மட்டுப்பெட்டி எனும் இடத்தின் எக்கோ பாயிண்ட் சாலை வளைவில் அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்துள்ளது. இதில் கல்லூரி மாணவிகள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மூணாறு காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எக்கோ பாயின்ட் சாலை வளைவில், முன்னே சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்ததாக பேருந்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 40 பேருடன் சென்ற பேருந்தில் இருந்த 15 பேர் காயங்களுடன் மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்றிருந்தபோது மூணாறு அருகே விபத்தில் பலியான இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications