நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! டெய்லரின் தலையை துண்டித்த 2 பேர் கைது! பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா?
உதய்ப்பூர்: ராஜஸ்தான் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பதிவு செய்த டெய்லரை தலை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால் 7 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கைதானவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் தெருவில் வசித்து வருபவர் கண்ணையா லால். கண்ணையா லால் தையல் தொழிலாளி (டெய்லர்)ஆவார்.
இந்நிலையில் அவரது கடைக்குள் நுழைந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

தலை துண்டித்து படுகொலை
மால்டாஸ் தெரு கடையில் வைத்து கண்ணையா லாலை கத்தியால் அந்தநபர்கள் சராமாரியாக வெட்டினர். மேலும் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும் கொலையாளிகள் கொலை தொடர்பாக வீடியோ வெளியிட்டனர். அதில் இருவரும் கண்ணையா லால்லை கொலை செய்ததாக தெரிவித்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வேகமாக பரவியது. இதனால் உதய்ப்பூரில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.

கொலைக்கான காரணம்?
மேலும் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இவரை பாஜக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இதற்கிடையே கண்ணையா லால், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டடதால் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உதய்ப்பூரில் சிலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். டயர்கள், கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. அவர்களை போலீசார் விரட்டினர்.

2 பேர் கைது
மேலும் மால்டாஸ் தெருவில் கடைகள் அடைக்கப்பட்டன. 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மேலும் ‛‛ தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என முதல்வர் அசோக்கெலாட் கூறினார். மேலும் போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
மேலும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த டெய்லர் கண்ணையா லாலை கொலை செய்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைதான 2 பேருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

7 போலீஸ் எல்லையில் ஊரடங்கு அமல்
மேலும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் உதய்ப்பூர் கலெக்டர் சார்பில் 7 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தான் மாண்டி, கந்தகார், ஹத்திபோல், அம்பா மடா, சுரஜ் போல், புபால்புரா, சவினா ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications