"இந்தியா" கூட்டணி தற்போது வலுவாக இல்லை.. போட்டு உடைத்த உமர் அப்துல்லா.. பூரிப்பில் பாஜக

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்தியா கூட்டணி தற்போது வலுவாக இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உமர் அப்துல்லாவின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில் பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளன.

 unfortunate that condition of INDIA Alliance is not strong right now says Omar Abdullah

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் உள்பட மொத்தம் 28 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டு வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவை தோற்கடிப்பதுதான் இந்தியா கூட்டணியின் வியூகம். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பாட்னா, பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியா கூட்டணிக்குள் மோதல்: எல்லாம் சரியாக போய்க் கொண்டு இருந்த நேரத்தில் தற்போது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வடி கட்சி சில தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் தன்னிச்சையாக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்ததாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

அதோடு, காங்கிரசின் போக்கு சரியில்லை என்ற ரீதியில் விமர்சிக்கவும் செய்தார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் கூட்டணி கட்சிகளுக்குள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வெளிப்படையாக காங்கிரஸ் - சமாஜ்வாடி மோதிக்கொண்டது கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டார்த்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இது நல்லது அல்ல: இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணி தற்போது வலுவாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:- 'இந்தியா கூட்டணியின் நிலைமை தற்போது வலுவாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சில உள் பிரச்சினைகள் இருக்கிறது.

அவ்வாறு இருக்க கூடாது. குறிப்பாக தேர்தல் நடைபெறும் நான்கு முதல் 5 மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. சமாஜ்வாடி - காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியுள்ளது. இரு கட்சிகளும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் போட்டியிட போவதாக கூறுகின்றன. இது கூட்டணிக்கு நல்லதல்ல. 5 மாநில தேர்தலுக்கு பிறகு மீண்டும் இது குறித்து ஆலோசனை செய்ய முயற்சிப்போம்" என்றார்.

இந்தியா கூட்டணி ஆரம்பித்ததில் இருந்தே இந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டின் போது குளறுபடி ஏற்படும் என்றும், எனவே தேசிய ஜனநாயக கூட்டணி தான் 3வது முறையாக வெற்றி வாகை சூடும் எனவும் பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், உமர் அப்துல்லாவின் இந்த பேச்சின் மூலம் இந்தியா கூட்டணி நிச்சயம் தோல்வியடையும் என்ற பூரிப்பில் பாஜக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+