For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா குழந்தைகள் எப்படிலாம் கஷ்டப்படுறாங்க தெரியுமா?.. யுனிசெஃப் வெளியிட்ட திடுக் ரிப்போர்ட்

இந்தியா குழந்தைகள் எந்த மாதிரியான விஷயங்கள் காரணமாக கஷ்டப்படுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக யுனிசெஃப் ஆய்வு ஒன்றை செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா குழந்தைகள் எந்த மாதிரியான விஷயங்கள் காரணமாக கஷ்டப்படுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக யுனிசெஃப் ஆய்வு ஒன்றை செய்து இருக்கிறது. அதன் மூலம் குழந்தைகள் எதற்கெல்லாம் வருத்தப்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த முடிவுகள் அனைத்தும் இந்திய குழந்தைகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறது.

தீவிரவாதம் தொடங்கி வறுமை வரை குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் விரிவாக தெரிய வந்து இருக்கிறது.

யுனிசெஃப் ஆய்வு

யுனிசெஃப் ஆய்வு

இந்தியா குழந்தைகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு யுனிசெஃப் அமைப்பால் சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டனர். தீவிரவாதம், வறுமை, அரசியல், தலைவர்களின் செயல்பாடு ஆகியவை குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்று ஆய்வு செய்தது. அதன்படி இந்திய குழந்தைகளில் 96 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடக்கும் வன்முறைகள் காரணமாக பயப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் அதில் 51 சதவிகிதம் பேர் நேரடியாக தாங்களே பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

தீவிரவாதம்

தீவிரவாதம்

இந்திய குழந்தைகள் பலர் தீவிரவாதம் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதன்படி 95 சதவிகித குழந்தைகள உலகத்தில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளை கண்டு கவலை கொண்டுள்ளனர். மேலும் 52 சதவிகிதம் பேர் தீவிரவாதத்தின் காரணமாக நேரடியாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

கல்வி காரணமாக

கல்வி காரணமாக

இதில் பெரியவர்களின் கண்டிப்பு காரணமாக பாதிக்கப்படுவதாகவும் பலர் கூறியுள்ளனர். அதன்படி 94 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சரியான கல்வி இல்லாமல் 95 சதவிகிதம் பேரும் 97 சதவிகிதம் பேர் வறுமை காரணமாகவும் வருத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

எங்கள் வழி நடக்க வேண்டும்

எங்கள் வழி நடக்க வேண்டும்

இந்த நிலையில் 54 சதவிகிதம் பேர் சரியான மருத்துவ வசதி இல்லை என்று வருத்தப்பட்டுள்ளனர். 70 சதவிகிதம் பேர் உலக தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் முக்கியமாக 91 சதவிகிதம் பேர் உலக தலைவர்கள் குழந்தைகளின் சொல்படி நடந்தால் சரியாக இருப்பார்கள் என்று கூறியிருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு வரப்போகும் எதிர்காலம் குறித்தும் சில அச்சம் எழுப்பி உள்ளனர்.

English summary
UNICEF took a survey on Indian children about their worries. UNICEF survey has states that 96 percent of Indian children worry about violence against them. In that 51 percent feel that it would personally affect them and everyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X