திருவிழாக்களில் மாடுகளை பலியிடவும் தடை.. மத்திய அரசின் அடாவடி விதிமுறைகள் முழு விவரம் இதோ!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது.
எனவே, இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள் இவைதான்:
- வயதில் குறைந்த கால்நடைகளை மார்க்கெட்டுக்கு யாரும் கொண்டுவர முடியாது
- மேற்கண்ட விலங்குகளை மார்க்கெட்டுக்கு கூட்டி வருவோர் அதன் உரிமையாளர் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலுடன் வர வேண்டும். விலங்கின் உரிமையாளர் முகவரி, போட்டோ அடையாள அட்டை நகல் ஆகிவையும் அவசியம்.
- கால்நடையின் அடையாளங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும்
- இறைச்சி தேவைக்காக கால்நடை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என தெரியப்படுத்த வேண்டும்
- கால்நடையை வாங்குபவரின் அடையாள அட்டை நகல், முகவரி உள்ளிட்ட விவரம் கொடுக்கப்பட வேண்டும்
- விவசாய தேவைக்காகவே கால்நடை வாங்கப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்ய தேவைப்படும் ஆதாரங்களை பெறவேண்டும்
- கால்நடையை வாங்குவோர் அடுத்த 6 மாத காலத்திற்குள் அதை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்
- அடுத்த ஆறுமாத காலத்திற்கு அந்த ஆவணங்களை பராமரிக்க வேண்டும்
- சோதனை செய்யும் அதிகாரியிடம் இந்த ஆவணத்தை தேவைப்படும்போதெல்லாம் காட்ட வேண்டும்
- கால்நடையை வாங்கியவர் அதை கசாப்புக்காக விற்பனை செய்ய கூடாது
- மாநில அரசின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்
- மதம் தொடர்பான விழாக்களில் இந்த கால்நடைகளை (மாடு, எருமை, ஒட்டகம், காளை) பலியிடக்கூடாது
- மாநில அரசின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு மாநிலங்களுக்கு இந்த கால்நடைகளை விற்பனை செய்ய கூடாது
- கால்நடை மார்க்கெட்டில் நடைபெறும் விற்பனையின்போது அதுகுறித்து 5 நகல்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும். ஒன்று விற்பனையாளரிடம், 2வது வாங்கியவரிடம், 3வது வாங்கியவர் வாழும் தாசில்தார் அலுவலகம், 4வது நகல், மாவட்ட தலைமை கால்நடை அலுவலர், 5வது நகல் கால்நடை மார்க்கெட் கமிட்டியிடம் இருக்க வேண்டும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications