நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ

  டெல்லி: கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமையவுள்ளதை அடுத்து டெல்லி தலைமையகத்தில் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

  கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

  Union Ministers in Delhi Party office celebrate their party leading

  இந்த தேர்தலில் பாஜகவா, காங்கிரஸா யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது. தொங்கு சட்டசபை அமையும் என்றும் கருத்து கணிப்புகள் சொல்லப்பட்டன.

  இந்நிலையில் பாஜக 115 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. அத்தோடு பாஜக கொடி பறக்க உள்ள மாநிலங்களில் கர்நாடகம் 21-ஆவது மாநிலமாக திகழவுள்ளது.

  இந்த மகிழ்ச்சியை பெங்களூர் பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் கொண்டாடினர். அதுபோல் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கொண்டாடினர்.

  அப்போது ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டிவிட்டார். பாஜக வெற்றி அடையவுள்ளதால் டெல்லியில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Union Ministers Ravi Shankar Prasad and Nirmala Sitharaman celebrate at party headquarters in Delhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற