50 ஆண்டுகளில் இல்லாத அதிக கனமழை.. ஏரி போல் மாறிய விஜயவாடா.. ஆந்திரா வெள்ளத்தில் மிதக்க காரணம் என்ன?
விஜயவாடா: ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகர் பிராந்தியம் குண்டூர், என்.டி.ஆர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகிய பகுதிளில் உள்ளது. இந்த பகுதி முழுவதுமே கனமழை கொட்டி பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கேரளா, குஜராத், பீகார் போன்ற இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்த மாத இறுதியுடன் தென்மேற்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து இருக்கிறது.

குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகர் பிராந்தியம் குண்டூர், என்.டி.ஆர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகிய பகுதிளில் உள்ளது. இந்த பகுதி முழுவதுவே கனமழை கொட்டி பெரும்பாலன இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா! இன்று 21 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்
கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். விஜயவாடா, குண்டூர் போன்ற பெரு நகரங்கள் கூட வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆந்திராவை புரட்டி போட்டுள்ள இந்த கனமழைக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே காரணம்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், சனிக்கிழமை பேய் மழை கொட்டியது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கிருஷ்ண நதி மற்றும் புடமேரு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் உள்ள விஜயவாடாவிலும் தண்ணீர் பல இடங்களில் சூழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டும் 29 செ.மீட்டர் மழை பெய்தது. ஆந்திராவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் மழையின் அளவு 37 செ.மீட்டரை தொட்டது. தொடர் மழையால் புடமேரு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விஜயவாடா நகரில் 40 சதவிகிதம் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.












Click it and Unblock the Notifications