ஒரே டார்ச்சர்.. இரவெல்லாம், பூச்சியைவிட கேவலமா.. கோர்ட்டுக்கு ஓடிய பெண்.. எங்காச்சும் இது நடக்குமா?
கான்பூர்: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி தேடி, நீதிமன்றங்களிலும், நீதிபதிகளிடமும் முறையிடுவது வழக்கம்.. ஆனால், ஒரு நீதிபதியே, சக பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்?? நம்ம நாட்டில்தான் இப்படி ஒரு சமாச்சாரம் நடந்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் பெண் சிவில் நீதிபதி அந்த பெண்.. ஆனால், இவரது பெயர் வெளியிடப்படவில்லை.. தன்னுடைய சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகாரை கூறியிருக்கிறார் இந்த பெண் நீதிபதி.
பாரபங்கியில் தான் பதவியில் இருந்தபோது, மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த பெண் நீதிபதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

நடவடிக்கை: இதுகுறித்து, கடந்த வருடமே அலகாபாத் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்ததாகவும், ஆனால், இப்போதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.. பாதிக்கப்பட்ட இந்த பெண் நீதிபதி, தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு 2 பக்க கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: "பாராபங்கி என்ற பகுதியின் நீதிபதியாக எனக்கு பணி வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி என்னை இரவு சந்திக்குமாறு வர சொன்னார். அப்போது மிகவும் கீழ்த்தரமான முறையில் என்னை நடத்தினார். பாலியல் தொல்லை கொடுத்தார். குப்பை தொட்டியை விட, ஒரு பூச்சியை விட கேவலமாக நான் நடத்தப்பட்டேன். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.
போலி நடவடிக்கை: ஐகோர்ட் மேலிடத்திற்கு கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தேன். ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலியான நடவடிக்கை எடுப்பதாக உணர்கிறேன். இது தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மாவட்ட நீதிபதியில் இருந்து மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தவறும் பட்சத்தில், எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது.
எனக்கு இனியும் வாழ எனக்கு விருப்பமில்லை.. இந்த ஒன்றரை வருடங்களில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன்... இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்.. தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்" என்று இவ்வாறு பெண் நீதிபதி கூறியுள்ளார்.
வைரல் கடிதம்: இவரது கடிதம் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அத்துடன், மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்தும், அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் முழு அறிக்கை கேட்டுள்ளார்.
ஒரு நீதிபதி, சக பெண் நீதிபதிக்கே பாலியல் தொல்லை தந்ததாக சொல்லப்படுவது அதிர்ச்சியை தந்துவரும்நிலையில், தற்கொலை செய்யவும் அனுமதி கேட்டிருப்பது அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications