லோன் கிடைக்கவில்லை.. பக்கோடா கடை திறக்க உதவுங்கள்.. ஸ்மிரிதி இராணிக்கு இளைஞர் கடிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கோடா விற்ற வழக்கறிஞர்கள்- வீடியோ

  லக்னோ: சில நாள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி ''200 ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான்'' என்றார். அது மிகவும் வைரல் ஆனது.

  இதே கருத்தை பாஜக தலைவர் அமித் ஷாவும் சொல்லி இருந்தார். தற்போது இது பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

  இந்த நிலையில் லக்னோவை சேர்ந்த அஷ்வின் மிஸ்ரா என்ற இளைஞர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் பக்கோடா கடை திறக்க உதவுமாறு கேட்டு உள்ளார்.

  திறக்க வேண்டும்

  திறக்க வேண்டும்

  அந்தக் கடிதத்தில் அவர் ''என்னுடைய வேலை தேடும் படலம் இதோடு முடிந்தது. பிரதமரின் பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இனி நானே பக்கோடா கடை திறக்கப் போகிறேன். இதன் மூலம் நான் பிறருக்கும் வேலைக் கொடுப்பேன். மோடி சிறப்பாக பேசி இருக்கிறார்.'' என்றுள்ளார்.

  சம்பளம்

  சம்பளம்

  மேலும் ''வேலை இல்லாமல் இருப்பதற்குப் பக்கோடா விற்பது நல்லது என்றுள்ளார். தினமும் 200 ரூபாய்க்கு அதிகமாகக் கிடைக்கும் என்றுள்ளார். அதனால் நானே இந்த வேலையைச் செய்ய போகிறேன். வேலை இல்லாமல் இருக்கும் என் நண்பர்களையும் செய்ய சொல்ல போகிறேன்'' என்றுள்ளார்.

  லோன் இல்லை

  லோன் இல்லை

  அதேபோல் ''நான் இதற்காக லோன் கேட்க சென்றேன். கிட்டத்தட்ட எல்லா வங்கியிலும் லோன் கேட்டேன். ஆனால் அவர்கள் லோன் கொடுக்கவில்லை. இதற்கெல்லாம் லோன் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். உடனே எனக்கு மனம் உடைந்து விட்டது'' என்றுள்ளார்.

  பிளீஸ் உதவுங்கள்

  பிளீஸ் உதவுங்கள்

  கடைசியாக ''அதன்பின்தான் பிரதம மந்திரியின் மக்கள் நல நிதி இருக்கும் விஷயம் தெரிந்தது. அதில் 10 கோடி மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்டதாக மோடி பேசி இருந்தார். எனக்கு அதில் இருந்து கொஞ்சம் மட்டும் தொழில் தொடங்க உதவுங்கள். இதுகுறித்து நீங்கள் மோடியிடம் பேசுங்கள்'' என்று ஸ்மிரிதி இராணியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  UP guy named Ashwin Mishra writes letter to Smriti Irani. He says thet government should help him to start 'pakoda' shop.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற