ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் பழங்கால நினைவு சின்னங்கள் உள்ளன. இந்த நினைவு சின்னங்களை பாதுகாக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் நினைவு சின்னங்களை பாதுகாக்கும் விஷயத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி உத்தர பிரதேச மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛சுற்றுலா துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் மாநிலத்தில் சுற்றுலா துறை நடவடிக்கைகளை அதிகரிக்க மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக சத்தர் மன்சில், கோத்தி கலிஸ்தான் இ-இராம், கோத்தி தர்ஷன் விலாஸ், கோத்தி ரோஷன்-உத்-தௌலா, சுனார் கோட்டை, பர்சானாவின் ஜல் மஹால், சுக்லா தலாப், கான்பூர் மற்றும் பித்தூரின் டிகைத்ராய் பரதாரி உள்ளிட்ட இடங்களுக்கான தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
மேலும் சங்கரஹாலயா மந்திர் நிர்மாண பணிகளில் ராமர் தொடர்பான மரபுகள் இணைக்கப்பட வேண்டி உள்ளது. அயோத்திக்கு வரும் சுற்றுலா பயணிகள் ராமர் மற்றும் அவர் தொடர்புடைய விஷயங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications