"தலாக்.. தலாக்.. சொல்லிட்டு போய்ட்டாங்களே.. ஆனால் நாங்க?" வீடு வீடாக போன அமித்ஷா.. பரபர உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்டில் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்குள்ள பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, புஷ்கர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.. ஆனால், இந்த ஒருவருடத்தில் 3 முதலமைச்சர்கள் இதுவரை அங்கு பதவி ஏற்றுள்ளனர்.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு, பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க போகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.. அப்படியனால் 36 தொகுதிகளை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ, அதுதான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

வியூகங்கள்
அதனால், அதை மட்டுமே குறிக்கோளாக வைத்து பிரச்சாரங்களும் வியூகங்களும் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி வருகிறது.. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 60 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜக நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது..

பாஜக
அதேசமயம், பாஜகவில் ஏகப்பட்ட உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.. இன்னும் தேர்தலே ஆரம்பிக்காத நிலையில், தேர்தல் தேதி அறிவித்துவிட்ட நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜகவுக்குள் பூசல் வெடித்து வருகிறது.. எனினும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது...

அமித்ஷா
மற்றொரு பக்கம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் ருத்ரபிரயாங் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அப்போது வீதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

வளர்ச்சி பணிகள்
பிறகு வீடு வீடாக சென்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரகண்டில் பாஜக அரசு செய்த வளர்ச்சிப் பணிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அமித்ஷா நேரடியாகவே விநியோகித்தார்.. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சேவைகளையும் நினைவுபடுத்தி அமித்ஷா தன்னுடைய பேச்சை துவங்கினார்..

தலாக் தலாக்
அமித்ஷா பேசும்போது, "இஸ்லாமிய மத பெண்களை திருமணம் செய்துவிட்டு அவர்களது கணவர்கள் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி பிரிந்து சென்றுவிட்டனர்.. ஆனால், முத்தலாக் சட்டத்தை ஒழித்தவரே பிரதமர் மோடிதான்.. பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க 700-க்கும் அதிகமான விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.. உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்..

பின்னடைவு
கடந்த 2014, 2019ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற வைத்தீர்கள்... அதுபோலவே கடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவை ஆட்சி பீடத்தில் அமர வைத்தீர்கள்... இந்த முறையும் நல்லாட்சிதொடர பாஜகவுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.. இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருவதையடுத்து, காங்கிரஸ் தன் பங்குக்கும் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.. எனினும் மூத்த தலைவர்கள் அங்கே அடிக்கடி பிரச்சாரம் மேற்கொள்ளாதது அக்கட்சிக்கு லேசான பின்னடைவை பெற்று தருவதாக கருதப்படுகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications