டிச.25 வாஜ்பாய் பிறந்தநாள், தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும்: மோடி
டெல்லி: வாஜ்பாயின் பிறந்தநாள், தேசிய நல்லாட்சிமுறை தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த எம்பிக்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதுபற்றி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி, தேசிய நல்லாட்சிமுறை தினமாக கொண்டாடப்படும் என்று நரேந்திர மோடி கூறினார். அன்றைய தினத்தை, பாஜ எம்பிக்களும், அரசும் நல்லாட்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும். அன்றைய தினத்தில், பாஜ எம்பிக்கள் தங்களது தொகுதியில், தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஒருமணி நேரம் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதாப் ரூடி கூறினார்.

முன்னதாக, நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பாராட்டுக்களை தெரிவித்தார்.
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் அமித்ஷா, தற்போது நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கையில் மொத்தம் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறி னார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications