பனி மூட்டம்: டெல்லி - ஆக்ரா சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து- வைரல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil
  புகை மூட்டத்தினால் அடுத்தடுத்து மோதிக்கொள்ளும் வாகனங்கள்-வீடியோ

  டெல்லி : டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியின் காற்றில் உள்ள மாசின் அளவு அதிக அளவு இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.

  Vehicles Collide one by one in Yamuna Express Highway in Greater Noida due to poor smog

  இன்று அதிகாலை 6 மணியளவில் டெல்லி சாலைகளில் பனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக கடுமையான புகை மூட்டம் நிலவியது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

  சாலைகள் சரியாகத் தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். இன்று அதிகாலை டெல்லி - ஆக்ரா சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பனிமூட்டத்தால் சூழப்பட்டது. நொய்டா அருகே இருக்கும் தன்கவுர் என்கிற இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி நடப்பதால், சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

  அதையும் தாண்டி அங்கு நிலவிய காற்று மாசுபாட்டுடன் கூடிய பனிப்புகையால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் ஆக்ரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஆறு கார்களும், டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த எட்டு கார்களும் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

  இடைவெளி இல்லாமல் வேகமாக வந்து வாகனங்கள் மோதுவது காண்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன்கவுர் காவல் நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, 'டெல்லியில் திடீரென ஏற்பட்ட பனிமூட்டம் நண்பகல் தாண்டியும் விலகாமல் இருக்கிறது. சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்து எச்சரிக்கை விளக்குகள் எரியவிடப்பட்ட போதிலும் வாகனங்கள் பார்வை குறைபாட்டால் வாகனங்கள் மோதி உள்ளன. இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Six people were injured when 13 vehicles were caught in a pile-up on the Yamuna Expressway in Greater Noida’s Dankaur area due to low visibility on Wednesday morning.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற