சத்தீஸ்கர் முதல் கட்ட வாக்குப் பதிவு- மாவோயிஸ்டுகள் வன்முறையை மீறி 70% பதிவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை மீறி 70% வாக்குகள் பதிவாகின.
90 உறுப்பினர் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தர் மற்றும் ராஜ்நந்த்கான் பகுதிகளில் 18 தொகுதிகளில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதை மீறி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

70% வாக்கு பதிவு
வாக்குப் பதிவு முடியும் போது செய்தியாளரிடம் பேசிய மாநில இணைத் தேர்தல் அதிகாரி டி.டி.சிங், 70% வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.

வாக்குப் பதிவு நேர மாற்றம்
பஸ்தர் பகுதியில் உள்ள 12 தொகுதிகளில் மாலை 3 மணிக்கும், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

சிஆர்பிஎப் வீரர் பலி
தண்டேவடா மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் பி.ஜோசப் என்ற வீரர் உயிரிழந்தார்.

கான்கேரில் ஒருவர் படுகாயம்
கான்கேர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

துப்பாக்கி சூடு
தண்டேவடா மற்றும் பிஜாப்பூர் ஆகிய இடங்களில் சில வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டனை நடைபெற்றது.

வெடிகுண்டுகள் பறிமுதல்
பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. தண்டேவடா மாவட்டத்தில் உள்ள மங்னார் பகுதியில் 2 வெடிகுண்டுகளும், குவாகொண்டா பகுதியில் 8 வெடிகுண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. நாராயண்பூர் மாவட்டத்தின் ஓர்ச்சா பகுதியில் டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications