காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் கர்நாடகாவுக்கு அநீதி: சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு கர்நாடகாவுக்கு எதிரானதாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம் செய்தது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் கர்நாடக அரசு தரப்பு வாதம் முன்வைத்து வருகிறது.

We are totally got injustice by the Cauvery tribunal decision, Karnataka government says

இன்றைய வாதத்தின்போது, கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தீர்ப்பாயம் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை தவறுதலாக தீர்ப்பாயம் கணக்கிட்டதாக குற்றம்சாட்டியது கர்நாடகா. ஏனெனில் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளது என்கிறது கர்நாடகா.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பால் நாங்கள் முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என கர்நாடக அரசு வாதத்தில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில் 11ஆயிரம் ஏக்கர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கர்நாடகாவில் 28ஆயிரம் ஏக்கர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது அம்மாநிலம். இவ்வாறு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இனிமேல் இந்த வழக்கு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We are totally got injustice by the Cauvery tribunal decision, Karnataka government says in Supreme Court.
Please Wait while comments are loading...