''இன்னும் 5-6 மாதங்களில் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்''.. விவசாய சங்க தலைவர் நம்பிக்கை!
ஜெய்ப்பூர்: வேளாண் சட்டம் தொடர்பாக அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.
வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ராகேஷ் திகைத் கூறினார்.

விவசாயிகளின் தீர்க்கமான போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 120 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகின. ஆனாலும் விவசாயிகள் மனம் தளராமல் தொடர்ந்து டெல்லியின் பல எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடரும்
மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அதன்பிறகு குழு அமைத்து நல்ல முடிவுக்கு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், 120 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாடு தழுவிய போராட்டமும் நடத்தினார்கள். அசாமில், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருவதால் அங்கு சென்ற விவசாயிகள் பா.ஜ.கவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும்
அவ்வப்போது விவசாயிகள் ஒன்று திரண்டு மகா பஞ்சாயத்தும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் நிருபர்களிடம் பேசிய பாரதிய கிஷான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது:- வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளோம். பர்தோலி மற்றும் சபர்மதிக்கும் செல்ல உள்ளோம். அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் நம்புகிறோம்' என்று ராகேஷ் திகைத் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications