இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கிறோம்.. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஆம் ஆத்மி
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
காலை 8 மணியிலிருந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள், பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக அமைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி 350-க்கும் மேற்பட்ட இடங்களில், பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 88 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ள பாஜகவிற்கு, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்த வரை 7 மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதாவே முன்னிலை பெற்றுள்ளது.
மாநிலத்தை ஆளும் கட்சியான ஆம்ஆத்மியும், பல காலமாக டெல்லியை ஆட்சி செய்த பிரதான கட்சியான காங்கிரசும் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. முன்னிலையில் உள்ள பாஜக வேட்பாளர்களில் மூன்று பேர் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் பெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பர்வாஜ், மீண்டும் பிரதமர் பதவிக்கு வர உள்ள மோடி அப்பதவியிலிருந்து கொண்டு பல நல்ல வேலைகளை செய்வார் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் ஜனநாயகத்தில், மக்களின் தீர்ப்பு மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் மீண்டும் வெற்றி பெற்றதற்கு மோடிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் பிரதமர் பதவியிலிருந்து கொண்டு எதிர்காலத்தில் பல நன்மைகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என வாழ்த்துவதாக சவுரப் பர்வாஜ் கூறியுள்ளார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications