For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் தொடரும் சோகம்: மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 15 குழந்தைகள் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

West Bengal: 15 infants die in one day
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு பகுதியில் சிலிகுரி மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தாயின் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகள், குறைபிரசவம், நோய் கிருமி தாக்குதல் போன்ள பல காரணங்களால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் மொத்தம் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எடைக்குறைவு, நோய் தொற்றுதல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறப்பது கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடர்கதையாகி வருகிறது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவிலுள்ள பி.சி.ராய் குழந்தைகள் நினைவு மருத்துவமனையில், 18 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மால்டா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மூன்றாண்டுகளில் 350 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரியில் மால்டா மாவட்டத்தில் மீண்டும் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். சிறிது காலத்திற்கு இப்பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

English summary
At least 15 infants have died at a government hospital in West Bengal's Siliguri district in the past 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X