For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டக்கென கை போட்டு.. "முஸ்லீம் இளைஞரும் மோடியும்".. 40 செகண்ட்.. காதில் அப்படி என்னதான் சொன்னார்?

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பிரச்சாரம் செய்துவிட்டு, வேகவேகமாக ஹெலிகாப்டரை நோக்கி பிரதமர் சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த முஸ்லிம் இளைஞர், கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தார்.. கிட்டத்தட்ட 40 செகண்ட் மோடியின் காதில் ஏதோ பேசியிருக்கிறார்.. அது என்னவா இருக்கும்? என்பதுதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைப்பது என மம்தா போராடி வருகிறார்.. இன்னொரு பக்கம் இந்த முறையாவது மேற்கு வங்கத்தை எட்டி பிடித்துவிட வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. இதனால் வங்க அரசியல் மிகுந்த பரபரப்புடன் நகர்ந்து வருகிறது.

மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.. அதற்கான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், பிரதமர் மோடி மேற்கு வங்கத்துக்கு பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மம்தாவை சீண்டியும், சாடியும் வருகிறார்.

 முஸ்லிம் இளைஞர்

முஸ்லிம் இளைஞர்

அப்படித்தான், கடந்த 2-ம் தேதி சோனாப்பூர் பகுதியில் பிரதமர் பிரச்சாரம் செய்தபோது, ஒரு சம்பவம் நடந்துவிட்டது.. பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அங்கிருந்த ஹெலிகாப்டரில் புறப்பட சென்று கொண்டிருந்தார்.. அப்போது, திரண்டு வந்த கூட்டத்தில் இருந்து ஒரு இஸ்லாமிய இளைஞர் மோடியை நோக்கி சென்றார்.. தன்னை சந்திக்கவே அந்த இளைஞர் ஆவலுடன் வருவதை மோடியும் கவனித்தார்.. பிறகு அந்த இளைஞர் பிரதமரின் காதில் எதையோ சொன்னார்..

 40 செகண்ட்

40 செகண்ட்

அப்போது, டக்கென அந்த இளைஞரை அரவணைத்து கொண்ட பிரதமர், அவர் தோளில் கைபோட்டு கொண்டார்.. இளைஞர் சொல்வதை மோடியும் கூர்ந்து கவனித்தார்.. மொத்தம் 40 செகண்ட் மோடியின் காதில் அந்த இளைஞர் பேசியிருக்கிறார்.. இதுசம்பந்தமான போட்டோ இணையத்தில் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.. அந்த இஸ்லாமிய இளைஞர் யார்? மோடி காதில் அப்படி என்ன பேசினார்? என்ற சந்தேகங்கள் கிளம்பின.

பாஜக

பாஜக

அரசியல் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கருத்தை சொன்னார்கள்.. ஆனால், ஓவைசி மட்டும் இந்த போட்டோவை பார்த்துவிட்டு வித்தியாசமான கருத்தை சொன்னார்.. "அந்த நபர் ஒரு முஸ்லீமே கிடையாது.. தேர்தலுக்காக பாஜக வின் நாடகம் இது" என்றார்.. ஒவைசி இப்படி சொல்லவும் பரபரப்பு மேலும் கூடியது.. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரே ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில் அவர் சொன்னதாவது:

 முஸ்லிம்

முஸ்லிம்

"நான் ஒரு முஸ்லிம்.. என் பெயர் ஜுல்பிகர் அலி... கொல்கத்தாவை சேர்ந்தவன். 2014-லில் இருந்து பாஜகவில் இருக்கேன்.. தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பொறுப்பில் உள்ளேன்.. என் வாழ்க்கையில் ஒரு முறையாவது மோடியை சந்தித்துவிட வேண்டும் என்று கனவு இருந்தது.. அதுக்குதான் அன்னைக்கும் சோலாப்பூர் சென்று முயற்சித்தேன்.. மோடியுடன் 40 நொடிகள் பேசினேன்.

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

பிரதமர் என்னை அரவணைத்து, என் பேர் கேட்டார், உனக்கு என்ன வேணும்னு கேட்டார்.. எனக்கு எம்எல்ஏ, எம்பி சீட் எதுவும் வேணாம்.. உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு சொன்னேன்.. உடனே போட்டோகிராபரை கூப்பிட்டு என்னுடன் போட்டோ எடுத்து கொண்டார்.." என்று இளைஞர் விளக்கம் தந்துள்ளார்... எல்லாம் சரி, இப்போது நமக்கு சந்தேகம் என்னவென்றால், இந்த போட்டோவும், இளைஞர் தந்த விளக்கமும், பாஜகவுக்கு சிறுபான்மையினர் மத்தியில் ஆதரவை பெற்று தருமா என்பதுதான்.. பார்ப்போம்..!

English summary
West Bengal: Muslim Youth with PM Modi and and Photo goes viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X