ISC Class 12: ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வில் 400/400 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்ற மாணவி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி அனுஷ்கா கோஷ், ஐ.எஸ்.சி. 12 ஆம் வகுப்பு தேர்வில் முழு மதிப்பெண் (400க்கு 400) பெற்று முதலிடம் பிடித்தார். அது போல் ஐஐடியில் படிப்பதற்கான முதல் படியான ஜேஇஇ மெயின்ஸ் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.
பராக்பூரில் உள்ள பனியட்டி செயின்ட் சேவியர்ஸ் இன்ஸ்டிடியூஷன் மாணவியான இவர், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் என அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

தனது வெற்றிக்குக் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தாயின் தொடர் ஊக்கமே காரணமென அனுஷ்கா தெரிவித்தார். முன்னணி ஐஐடி கல்வி நிறுவனங்களில் விண்வெளி பொறியியல் படிக்க வேண்டும் என்ற தனது கனவுடன், தற்போது ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுத் தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ஜே.இ.இ. தயாரிப்பு உத்தி குறித்து அனுஷ்கா கூறுகையில், "கடைசி நேரத்தில், எனது தேர்வுக்கான தயார் நிலையில் உள்ள குறைகளைத் தெரிந்து கொள்ளவும், நேர மேலாண்மைக்கு (Time Management) பழகிக் கொள்ளவும், தினமும் இரண்டு முதல் மூன்று மாதிரித் தேர்வுகளை எழுதுவதோடு, மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களையும் பயிற்சி செய்து வருகிறேன்." என்றார்.
அவர் ஐ.எஸ்.சி. தேர்வுகளுடன் ஜே.இ.இ. தேர்விற்கும் தயாரானார். ஐ.எஸ்.சி. பாடத்திட்டமானது சி.பி.எஸ்.இ-யைப் போலவே ஜே.இ.இ., நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நன்கு உதவும் என அனுஷ்கா குறிப்பிடுகிறார்.
"எந்தவொரு போட்டித் தேர்விலும் வெற்றி பெற, உங்களிடம் ஒரு சிறந்த உத்தியும் (Smart Strategy) முழுமையான தயாரிப்பும் இருக்க வேண்டும். ஜே.இ.இ மெயின் (JEE Main) தேர்வின் பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், ஐ.எஸ்.சி (ISC) பாடத்திட்டமானது ஜே.இ.இ மற்றும் நீட் (NEET) தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார். ஜே.இ.இ. மெயின் தேர்வில் அவர் 98 சதவீத மதிப்பெண் பெற்றார்.
இந்த மாணவி 10ஆம் வகுப்பு தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஆங்கிலத்தில் மட்டும் 2 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் அவர் மிகவும் வேதனை அடைந்தார். காரணம் ஆங்கிலம் அவருக்கு மிகவும் பிடித்த பாடமாம். ஆனால் தற்போது அவர் ஆங்கிலத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுவிட்டார். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஐ.எஸ்.சி. மற்றும் ஐ.சி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 அன்று வெளியாகின. ஐ.எஸ்.சி. 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 99.13% ஆகும். இதில் மாணவியர் 99.48%, மாணவர்கள் 98.81% தேர்ச்சி பெற்று மாணவியரே முன்னிலை வகித்தனர்.
இதேபோல், ஐ.சி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 99.18% ஆக இருந்தது. இங்கும், 99.46% தேர்ச்சி விகிதத்துடன் மாணவியரே முன்னிலை வகித்தனர். மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் 98.93% ஆகப் பதிவாகியுள்ளது.
ஐ.சி.எஸ்.இ. மற்றும் ஐ.எஸ்.சி. 2026 தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான results.cisce.org மற்றும் cisce.org ஆகியவற்றில் தற்போது காணலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications