"நெஞ்சு பதறுதே.." திடீரென பேய் பிடித்தது போல அலறும் மாணவிகள்.. "அந்த" கட்டிடத்தில் மர்மம்? பகீர்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் திடீரென மாணவ மாணவிகளுக்கு ஒரு வித மாஸ் ஹிஸ்டீரியா போல ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் அனைவரையும் அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு கட்டிடம் ஒன்றில் நுழைந்தவுடன் மாணவிகளுக்கு திடீரென ஏதோ ஆகிவிடுகிறது. திடீரென கத்த தொடங்குகிறார்கள்.

 What is the reason behind Mass Hysteria Incidents In Uttarakhand

ஏதோ பேய் பிடித்தது போல நடந்து கொள்கிறார்கள். அங்குள்ள சம்பாவத் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடந்த நிலையில், இப்போது உத்தரகாண்டில் மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

ஷாக் சம்பவம்: அங்கு ஏற்பட்ட மிக கொடூரமான வெள்ள பாதிப்புகள் இப்போது தான் குறைந்துள்ள நிலையில், மாணவிகள் இப்போது தான் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். அப்போது தான் அவர்கள் திடீரென இதுபோல வினோதமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். உத்தரகாண்டில் உத்தர்காஷியின் தௌந்திரி பகுதியில் உள்ள காமத் என்ற இடத்தில் உள்ள அரசு இன்டர் காலேஜில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்குள் மாணவிகள் நுழைந்துள்ளனர். அப்போது தான் அவர்கள் திடீரென இப்படி பேய் பிடித்தது போல நடந்து கொண்டுள்ளனர். ஏதோ ஓரிரு மாணவிகளுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அடுத்தடுத்து இப்படி நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்புவதாக உள்ளது.

நெட்டிசன்கள்: இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஒருவர், "உத்தரகாசியில் உள்ள ஒரு அரசு இன்னடர் காலேஜில் மாஸ் ஹிஸ்டீரியா (mass hysteria) நடந்துள்ளது. உள்ளூர் மக்கள் அந்த பெண்களுக்கு 'தெய்வீக சக்தி' இருப்பதாக கூறுகிறார்கள். முன்பு இதேபோன்ற சம்பவம் பகேஷ்வர் மற்றும் சம்பாவத் மாவட்டங்களில் நடந்துள்ளன. மருத்துவர்கள் இதை ஒரு physiological சம்பவமாக குறிப்பிடுகிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மாஸ் ஹிஸ்டீரியா என்பது anxiety எனப்படும் அதீத அச்ச உணர்வு காரணமாக ஏற்படும் ஒரு மோசமான பாதிப்பாகும். அங்கே சமீபத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டது. அதை இந்த மாணவிகள் நேரில் அனுபவித்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை மன ரீதியாக பாதித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.

உளவியல் பிரச்சினை: மருத்துவர்கள் இதை ஒரு உளவியல் பிரச்சினை என்றே குறிப்பிடுகிறார்கள். இது குறித்து அங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், "இந்தச் சம்பவம் எங்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து நாங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பேசினோம். சில சிறுமிகள் புதிய கட்டிடம் குறித்து தங்களுக்கு அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இங்கே நாங்கள் உளவியலாளரை நியமித்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக இதே கட்டிடத்தில் சில நாட்களுக்கு முன்பும் சில சிறுமிகளுக்கு இதுபோல நடந்துள்ளது. அப்போது இரு சிறுமிகள் மயமக்கமடைந்தும் விழுந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அந்த குறிப்பிட்ட கட்டிடத்தில் தொடர்வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பகீர் சம்பவங்கள்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த ரமக் அரசு இன்னடர் காலேஜிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன.. அப்போது சுமார் 39 மாணவிகள் அழுது, கூச்சலிட்டு, வகுப்புகளை விட்டு ஓடினர். அப்போதும் மாணவிகளுக்கு ஏதோ பேய் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதேபோல உத்தரகாண்டின் பாகேஷ்வர் பள்ளியிலும் மாணவிகள் கூச்சலிட்டு கொண்டே அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். மேலும், அங்கிருந்த சுவர்களிலும் தலையை முட்டிக் கொண்டனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+