"உலகிற்கே எடுத்துக்காட்டு.." வாக்களித்த உடன் பிரதமர் மோடி சொன்ன முதல் வார்த்தை இதுதான்! அடடே செம

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடி இன்று வாக்களித்த நிலையில், அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து இன்று 94 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

What PM Modi says after casting his vote for Lok Sabha election 2024


குஜராத் மாநிலத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், அகமதாபாத் தொகுதியில் இருந்து பிரதமர் மோடி வாக்களித்தார். வாக்களித்த பிறகு வெளியே வந்த பிரதமர் மோடியுடன் பலரும் ஆர்வமாகப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி: வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை வாக்களிக்க வேண்டும். இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தில் நான் ஒரு வாக்காளராக எப்போதும் வாக்களிக்கும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் அமித் ஷா போட்டியிடுகிறார்.

What PM Modi says after casting his vote for Lok Sabha election 2024

என்ன சொன்னார்: இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் தேர்தல் மேலாண்மை ஆகியவை உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.. உலகெங்கும் உள்ள நாடுகளில் நடக்கும் தேர்தல் முறைகளை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தாண்டு இந்தியாவில் தேர்தல் நடக்கும் நிலையில், இதை ஜனநாயக திருவிழா என்றே சொல்லலாம். நான் மீண்டும் சொல்கிறேன். பொதுமக்கள் திரளாக வந்து வாக்களித்து இந்த ஜனநாயக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் மோடி.. தேர்தல் ஆணையத்துக்கும் பாராட்டு! என்ன சொன்னார் தெரியுமா?


முதல் இரண்டு கட்ட தேர்தலை வன்முறையின்றி நடத்தியதற்காகத் தேர்தல் ஆணையத்தை வாழ்த்துகிறேன். மேலும், வாக்காளர்களுக்கு ஏற்ற வகையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும், கிளம்பும் முன்பு, வெயில் அதிகமாக இருப்பதால் செய்தியாளர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி, அது உடல்நலத்திற்கு நல்லது என்றும் அது உடலுக்கு தேவையான எனர்ஜியை தரும் என்றும் குறிப்பிட்டார்.

காந்தி நகர் தொகுதி:
பிரதமர் மோடி வாக்களித்த காந்தி நகர் தொகுதி 1989 முதலே பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. 1989க்கு பிறகு இடைத்தேர்தலைச் சேர்த்து அங்கு மொத்தம் 10 தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், அனைத்திலும் பாஜகவே வென்றுள்ளது. கடந்த காலங்களில் வாஜ்பாய், அத்வானி என பாஜக முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட இந்த காந்தி நகர் தொகுதியில் இந்த முறை உள்துறை அமைச்சர் அமித் ஷா களமிறங்குகிறார்.

What PM Modi says after casting his vote for Lok Sabha election 2024

காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் ஏழு சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில், அவை அனைத்தும் பாஜக வசம் உள்ளன. குஜராத் மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் பூபேந்திர படேலும் இங்குள்ள கட்லோடியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தான் எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்:
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தான் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் இருந்து அமித் ஷா முதல்முறையாகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் அமித் ஷா 8.94 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸின் சதுர்சிங் ஜவான்ஜி சாவ்தா வெறும் 3.37 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+