மகளை நேரிலும், போனிலும் விரட்டி விரட்டி வந்த பசங்க.. தனிமையில் கதறிய பரிதாப பெண்.. என்னாச்சு பாருங்க
திருமலை: 19 வயது பெண்ணின் மரண வாக்குமூலம், தெலுங்கானாவையே நிலைகுலைய செய்து வருகிறது. என்ன நடந்தது?
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ளது சிந்தலகுடம்.. இங்கு வசித்து வரும் தம்பதி ராமலிங்கம்-ராஜிதலா. இவர்களது 19 வயது மகள் கல்யாணி..

கல்யாணி: அதே கிராமத்தை சேர்ந்தவர் சிவா (25), மது (24) இருவரும், கல்யாணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளனர்.. இருவருமே கல்யாணியிடம் தங்களது காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கல்யாணி அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார்.
எனினும், 2 பேருமே தனித்தனியாக கல்யாணிக்கு லவ் டார்ச்சர் தந்து வந்திருக்கிறார்கள்.. "எங்களை காதலிக்காவிட்டால், உன்னுடைய போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம்" என்று மிரட்டி வந்திருக்கிறார்கள்.
லவ் டார்ச்சர்: இந்நிலையில், கடந்த 6ம்தேதி உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த துக்க நிகழ்வுக்கு கல்யாணியின் பெற்றோர் சென்றிருந்தனர்.. அப்போது கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் தெரிந்த மதுவும், சிவாவும், மாறி மாறி கல்யாணிக்கு போன் செய்து லவ் டார்ச்சர் தந்திருக்கிறார்கள்.
இதனால் உச்சக்கட்ட வெறுப்பும், மன வேதனையும் அடைந்த கல்யாணி, வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.. பிறகு துக்க வீட்டுக்கு சென்றிருந்த தன்னுடைய அப்பா, அம்மாவை ஃபோனில் அழைத்து விஷயத்தை சொல்லி உள்ளார் கல்யாணி.. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பக்கத்து வீட்டாருக்கு தகவல் சொல்லி, மகளை உடனடியாக காப்பாற்ற உதவி கேட்டிருக்கிறார்கள்..
தீவிர சிகிச்சை: அடுத்த சில நிமிடங்களிலேயே பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து, கல்யாணியை மீட்டு மிரியாலகுடா மருத்துவமனையிலும், பிறகு நல்கொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.. டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்தும் கல்யாணியின் உயிர் பிரிந்தது. முன்னதாக, நீதிபதியிடம் கல்யாணி மரண வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட 2 இளைஞர்களின் பெயரையும் கல்யாணி தன்னுடைய மரண வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறாராம்..
இதனிடையே, கல்யாணியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.. ஆனால், தங்களது மகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
மரண வாக்குமூலம்: அதன்படியே இளைஞர் சிவா என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், மரண வாக்குமூலத்தில் தன்னுடைய பெயரையும் கல்யாணி பெயரையும் தெரிவித்ததை அறிந்த மது என்ற மற்றொரு இளைஞர், அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.. ஆனால், அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications