கேட்கவே கேவலமாயிருக்கு.. தொடகூடாத இடத்துல தொட்டு.. நீதிபதி ரூமில் பெண்.. என்ன நடக்குது நம்ம நாட்டில்
அகர்தலா: திரிபுராவில் இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இதன் அதிர்ச்சியும், அதன் தாக்கமும் இன்னமும் குறையவில்லை. இப்போது அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..

வக்கிரங்கள்: பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்கள் துணை நிற்கின்றன.. அப்படிப்பட்ட நீதிமன்றத்திலேயே வக்கிரம் அரங்கேறினால்??
திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 23 வயதாகிறது.. கடந்த 13ம் தேதி, இவரது வீட்டுக்குள் 26 வயது இளைஞர் புகுந்துவிட்டார்.. தனியாக இருந்த இந்த பெண்ணை, மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துவிட்டார்.. இதையடுத்து, அந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கு சென்று புகார் அளித்தார்.
என்ன நடந்தது: இந்த புகாரின்பேரில் வழக்கு ஆரம்பமானது.. கடந்த 16ம் தேதி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலம் அளிக்க வரும்படி அந்த பெண்ணிடம் சொல்லி உள்ளார்.. அதன்படியே, 16ம் தேதி திரிபுராவின் கமால்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற அறைக்கு வாக்குமூலம் தருவதற்காக அந்த பெண் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த நீதிபதியே, பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தாராம்.. குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அந்த பெண் இன்னொரு புகார் அளித்தார்.
நீதிபதி: அந்த புகாரில் பெண் சொன்னதாவது: "16ம் தேதி என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய, மாஜிஸ்திரேட்டின் ரூமுக்குள் நுழைந்தேன்.. அப்போது நீதிபதி, அங்கிருந்த பெண் போலீசாரை வெளியே அனுப்பினார்.. சிறிதுநேரம் வெளியே இருக்கும்படி அவர்களிடம் நீதிபதி சொன்னார்.. பிறகு, கதவை மூடிய நீதிபதி, எனக்கு என்ன நடந்தது? என்று சொல்லும்படி கேட்டார்.
நான் வாக்குமூலம் தந்தேன்.. அப்போது, மாஜிஸ்திரேட் என்னை திடீரென பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்... வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தபோதே, வாக்குமூலம் வாங்கிக்கொண்டிருந்த நீதிபதி, என்னை பாலியல் நோக்கத்துடன் தொட்டு தொல்லை கொடுத்தார். உடனே நான் அவரது ரூமை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன்.. வழக்கறிஞர்கள் மற்றும் என்னுடைய கணவருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன்" என்றார்.
பார் கவுன்சில்: இதையடுத்து, கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அந்த பெண் புகார் செய்தார். அதேபோல, அப்பெண்ணின் கணவரும், பார் கவுன்சிலில் இன்னொரு புகாரை நீதிபதி மீது அளித்தார். இதைத்தவிர, பாதிக்கப்பட்ட பெண், போலீஸிலும் புகார் தந்தார்.
அந்த புகாரில், 'நீதிபதி ரூமுக்குள் வாக்குமூலம் கொடுத்தபோது நீதிபதி தொடக்கூடாத இடத்தில் என்னை தொட்டார். நான் எதிர்ப்புத் தெரிவித்தபோது, "தொட அனுமதிக்காவிட்டால் வழக்கு உனக்கு எதிராக மாறும்" என்று எச்சரித்தார். என்னுடன் வந்த பெண் கான்ஸ்டபிளை அறையில் இருந்து வெளியில் அனுப்பிவிட்டு இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார். உடனே நான் வாக்குமூலம் கொடுக்காமல் வெளியில் ஓடிவந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
நீதிபதி: இதையடுத்து, நீதிபதி கவுதம் சர்க்கார் தலைமையில் 3 பேர் குழுவினர், இந்த புகார்களை விசாரிக்க முனைந்தது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ்ஸுடன், கமல்பூரின் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி அலுவலகத்திற்கு சென்று, இந்த விசாரணையை நடத்தினார்கள்..
இந்த விசாரணை தற்போது முடிந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்து அந்த மாநில ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவுதான் திரிபுராவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தூண்கள்: இந்த நாட்டில், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, எத்தனையோ நீதிபதிகள் குரல் கொடுத்துள்ளார்கள்.. அப்பெண்களுக்கு பக்கபலமாக நின்று நம்பிக்கையை விதைத்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தந்து, பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும், ஒருசில நீதிபதிகளால், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் வலிமை மிக்க "தூண்" சாய்வது சரியல்ல.. ஏற்கவும் முடியவில்லை..!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications