For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்

குப்பை வண்டியில் யோகி படங்களை எடுத்து சென்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கான்பூர்: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போட்டோக்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி, டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது... சமீப காலமாகவே, முதல்வர் யோகி குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது..

இந்நிலையில், அம்மாநிலத்தின் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியை தள்ளிச் செல்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் திடீரென வைரலானது...

 குடியரசு தலைவர் தேர்தல்.. டெல்லியில் முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் தேர்தல்.. டெல்லியில் முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி

 குப்பை வண்டி - போட்டோக்கள்

குப்பை வண்டி - போட்டோக்கள்

இந்த வீடியோவை சிலர் எடுத்து கொண்டிருக்கின்றனர்.. அப்போது, குப்பை வண்டி இழுத்து செல்லும் அந்த தொழிலாளியை நிறுத்துமாறு சொல்கிறார்கள்.. பிறகு, அருகில் சென்று, குப்பை வண்டியில் இருந்து பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியவர்களின் உடைந்து போன போட்டோக்களை எடுத்து கேமிரா முன்பு காட்டுகின்றனர்.. அதைப் பற்றி அந்த நபரிடம் அவர்கள் கேட்கின்றனர்..

 குப்பை வண்டி

குப்பை வண்டி

அதற்கு அவர், "எனக்கும், இதுக்கும் சம்மந்தமில்லை. இவை குப்பையில் கிடந்தன. அதனால் நான் அவற்றை குப்பை வண்டியில் எடுத்து அப்புறப்படுத்த கொண்டு செல்கிறேன்" என்று பதில் சொல்கிறார். உடனே அந்த நபர்கள், அந்த போட்டோக்களை எடுத்து தண்ணீரால் கழுவுகிறார்கள்.. பிறகு,"இந்த போட்டோக்களை நாங்களே கொண்டு செல்கிறோம்.,.. மோடியும், யோகியும் இந்த நாட்டின் ஆன்மாக்களாக இருப்பவர்கள்" என்று அந்த நபரிடம் சொல்லிவிட்டு நகர்கின்றனர்..

 கண்டனம்

கண்டனம்

இந்த வீடியா வெளியான நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.. ஒரு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர் என்றுகூட இல்லாமல் இப்படியா நடந்து கொள்வது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைள் வெடித்தன. இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தொழிலாளி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.. அவரை பணிநீக்கம் செய்திருப்பதாக மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி உறுதிப்படுத்தி உள்ளார்..

 பிருந்தாவன்

பிருந்தாவன்

இதையடுத்து, அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோயுள்ளது.. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என்று மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. மேலும் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

English summary
who threw the photos and sanitation worker sacked in ups mathura for carrying pm, cm yogis portrait in garbage cart குப்பை வண்டியில் யோகி படங்களை எடுத்து சென்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X