Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீசை பார்த்ததும் லஞ்ச பணத்தை விழுங்கிய ஆபீசர்! ஸ்பாட்டிற்கு வந்த டாக்டர்! அடுத்து நடந்த "சம்பவம்"

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் வருவாய்த் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே அம்மாநிலத்தின் லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையின் (SPE) குழு அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

அங்கே இருந்த லஞ்சப் பணத்தையும் கணக்கில் வராத பணத்தையும் கைப்பற்றினர். அப்போது அங்கே இருந்த ஊழியர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் பயந்துவிட்டார். அவருக்கு அதை என்ன செய்வதென்றே புரியவில்லை. இருப்பினும், லஞ்சப் பணத்துடன் போலீசாருடன் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், அப்படியே அந்த லஞ்சப் பணத்தை எடுத்து விழுங்கிவிட்டார்.

 Why Madhya Pradesh Official Swallows ₹ 5,000 as Cops surrounded the spot

அவர் விழுங்கியது எதோ ஒரு நோட்டு, இரண்டு நோட்டு இல்லை.. மொத்தமாக அவரிடம் இருந்த 5000 ரூபாய் லஞ்சப் பணத்தையும் அவர் அப்படியே விழுங்கிவிட்டார். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது: நில விவகாரம் ஒன்றில் சந்தன் சிங் லோதி என்பவரிடம் இந்த பட்வாரி கஜேந்திர சிங் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லோதி லோக் ஆயுக்தா ஜபல்பூரில் புகார் செய்தார். இதையடுத்து அங்கே மறைந்திருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், கஜேந்திர சிங்கின் தனிப்பட்ட அலுவலகத்தில் வைத்து ரூ.4,500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகக் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கும் போது திடீரென படபடவென போலீசார் தனது ரூமிற்கு வந்ததால் சந்தன் சிங் பதறிவிட்டார்.. என்ன செய்வதென்று புரியாமல் டக்குனு அவர் தன்னிடம் இருந்த லஞ்ச பணத்தை எடுத்து விழுங்கிவிட்டார். இருப்பினும், அவர் லஞ்ச பணத்தை வாங்கியதையும் அதை விழுங்கியதையும் அங்கிருந்த போலீசார் பார்த்துவிட்டனர்.

மருத்துவமனை: இதையடுத்து சந்தன் சிங்கை பலீசார் அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். என்ன நடந்தது என்பதைக் கேட்ட மருத்துவர்களுமே ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டனர். அவர் விழுங்கிய பணத்தை எடுக்க மருத்துவமனையிலும் பல முயற்சிகள் செய்யப்பட்டன. கடையில் ஒரு வழியாக அவரை வாந்தி எடுக்க வைக்கவே பணமும் வெளியே வந்துள்ளது.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் சாஹு கூறுகையில், "பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் அளித்தனர். விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதியானது. நாங்கள் அந்த ஆபீசுக்கு சென்றோம்.. லஞ்சம் வாங்கும் போது சரியாக அந்த அதிகாரியைக் கைது செய்தோம்.. இருப்பினும், எங்களைக் கண்டு அவர் பயந்துவிட்டார். இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் பணத்தை விழுங்கிவிட்டார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு வைத்து வாந்தி எடுக்க வைத்துவிட்டோம்.. இப்போது அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று அவர் தெரிவித்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். லோக்ஆயுக்தா அதிகாரிகளுக்குப் பயந்து அரசு அதிகாரி ஒருவர் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+