பிரதமர் பாருக்குப் போனாரா?.. ராகுலின் தவறான உச்சரிப்பால் லோக்சபாவில் சிரிப்பலை!
டெல்லி: ராகுல் காந்தி பேசிய போது பிரதமர் நரேந்திர மோடி சிரித்த வண்ணம் இருந்தார்.
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு ராஷ்ட்ரீய ஜனதா கட்சி சார்பில் கொண்டு வரப்பட்டது. அதன் மீது இன்றைய தினம் விவாதமும், வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை விவாதம் நடந்த போது ராகுல் காந்தி பேசினார். அவர் பேசிய பேச்சுகள் உலக அளவில் டிரென்டாகின. அவர் பேசும் போது பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்பதை இந்தியில் "பிஎம் பஹார் மெயின் ஜாதே ஹைன்" என்று கூறினார்.
அப்போது வாய் குழறி பஹார் (வெளிநாடு) என்பதற்கு பதிலாக பார் என கூறிவிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. எனினும் தனது வார்த்தையை ராகுல் சரி செய்து கொண்டு தொடர்ந்து பேசினார்.
அப்போது பிரதமர் மோடி சிரித்தபடியே இருந்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!