மெஹபூபா, உமர் இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? வெளியான கடிதம்.. அதிர்ச்சி அளிக்கும் காரணம்!

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mehbooba Mufti & Omar Abdullah : மெஹபூபா,உமர் இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்?..வெளியான தகவல்

    ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடக்கத்தில் இருந்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் எதிர்த்து வந்தனர்.

    இதையடுத்து மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தற்போது மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று மாலை

    நேற்று மாலை

    நேற்று மாலை மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தற்போது தனித் தனியாக கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றும் இணையம் முழுக்க தற்போது வைரலாகி உள்ளது.

    என்ன கைது

    என்ன கைது

    இந்த கைதை அடுத்து இரண்டு பேரிடமும் போலீசார் முக்கிய கடிதம் ஒன்றை கொடுத்து உள்ளது. அந்த கடிதத்தில், உங்களின் செயல்பாடுகள் காஷ்மீரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பது போல இருக்கிறது. அதிலும் நீங்கள் சமீபமாக செய்த விஷயங்கள் காஷ்மீர் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இல்லை.

    பிரச்சனை

    பிரச்சனை

    நீங்கள் வெளியில் செல்வது காஷ்மீரில் கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மக்களின் அமைதிக்கு நீங்கள் எதிராக செயல்படுவது போல இருக்கிறது. மக்கள் இடையே நீங்கள் கலகத்தை உண்டாக்க நினைக்கிறீர்கள். அதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.

    இல்லை

    இல்லை

    தற்போது காஷ்மீரில் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உங்களை கைது செய்கிறோம். நீங்கள் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதான் மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட காரணம் என்று கூறப்படுகிறது. இந்த கடிதம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+