அதென்ன..அம்பயரிடம் “போலீஸ் விலங்கு”? ஸ்மித்தின் ரியாக்சன்.. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்டில் ருசிகரம்

விளையாட தகுதியான பந்தாக இருந்தால் பால் காஜின் ஒரு வளையத்திற்குள் அது தடையின்றி செல்ல வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4 வது மற்றும் இறுதி போட்டியிட்டு நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தபோது நடுவர் போலீசார் வைத்திருக்கும் கை விலங்கை போன்ற ஒன்றை வைத்து பந்தை அதன் உள்ளே விட்டது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழுந்து இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

சர்வதேச டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆசஸ் தொடருக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக உலக கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுவது இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர்.

4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

 பார்டர் கவாஸ்கர் கோப்பை

பார்டர் கவாஸ்கர் கோப்பை

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை நடைபெறும் தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தொடரில் பங்கேற்றனர். இதில் வெற்றிபெறுவதன் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

2 போட்டிகளில் வென்ற இந்தியா

2 போட்டிகளில் வென்ற இந்தியா

கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. இந்தூரில் நடந்த 3 வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இதனை அடுத்து அஹமதாபாத்தில் கடந்த 9 ஆம் தேதி இறுதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களை விளாசி அசத்தினார். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா அபார ஆட்டம்

இந்தியா அபார ஆட்டம்

அடுத்து பேட் செய்த இந்திய அணி விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் அசத்தல் சதங்களால் 571 ரன்களை குவித்தது. விராட் கோலி 186 ரன்களையும், ஷுப்மன் கில் 128 ரன்களையும் குவித்தனர். அக்‌ஷர் பட்டேல் 79 ரன்களை விளாசினார். 4 வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்துள்ளது.

நடுவர் வைத்திருந்த கருவி

நடுவர் வைத்திருந்த கருவி

இன்றைய போட்டியில் கோலியின் அசத்தலான பேட்டிங்கை கடந்து மக்களை ஈர்த்தது நடுவர் பயன்படுத்திய கருவி. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் விலங்கு போன்று இருந்த 2 வளையங்களில் பந்தை விட்டு எடுக்க முயன்றார். அதை ஏன் செய்தார்கள், அதன் பெயர் என்ன என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள்.

 பால் காஜ்

பால் காஜ்

அதன் பெயர் பால் காஜ் என்பார்கள். கிரிக்கெட் போட்டிகளின்போது பொதுவாக பந்துகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளின்போது சிவப்பு பந்துகள் அதிகம் சேதமடைந்து அதன் வடிவமே மாறிவிடும். அதுபோல் மாறினால் அதை போட்டுவிட்டு வேறு புதிய பந்தை விளையாட பயன்படுத்துவார்கள்.

பரிசோதித்த நடுவர்

பரிசோதித்த நடுவர்

இன்று இந்தியா பேட்டிங் செய்தபோது பந்தின் வடிவம் மாறி இருக்கிறதா என்பதை பால் கேஜ் மூலம் நடுவர் பரிசோதித்தார். விளையாட தகுதியான பந்தாக இருந்தால் பால் காஜின் ஒரு வளையத்திற்குள் அது தடையின்றி செல்ல வேண்டும். மற்றொரு வளையத்திற்குள் செல்லக்கூடாது. ஒருவேளை இதற்கு மாற்றமாக நடந்தால் அது சேதமடைந்த பந்தாக கருதப்படும்.

2 வளையங்கள்

2 வளையங்கள்

ஆனால், இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து ஒரு வளையத்திற்குள் சென்று மற்றொரு வளையத்திற்குள் செல்லவில்லை. எனவே அது தகுதியான பந்தாக கருதப்பட்டு விளையாட பயன்படுத்தப்பட்டது. எனவே அதே பந்து நடுவரிடம் பெற்றபின் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+