கணவனின் கழுத்தை அறுத்து கவரில் போட்டு, சாலையில் நடந்த மனைவி.. தெறித்து ஓடிய மக்கள்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

அமராவதி : ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே குடும்ப தகராறில் கணவனின் கழுத்தை அறுத்து தனியாக எடுத்து பையில் போட்டு சாலைகளில் உடை முழுவதும் ரத்தக்கறையுடன் சுற்றித்திரிந்த பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு ஏற்பட்டு கணவன் மனைவியை கொல்வது மனைவி கணவனை கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் ஒரு சில சம்பவங்கள் பெரும் பேசுப்பொருள் ஆகின்றன.

காரணம் முறையற்ற உறவு, வயதுக்கு மீறிய உறவு, கணவன் மதுபோதைக்கு அடிமையாதல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் பாதிப்பு குடும்பத்தினரை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

கொடூர கொலை

கொடூர கொலை

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே குடும்ப தகராறில் கணவனை கொலை செய்த மனைவி அவரது கழுத்தை அறுத்து எடுத்து அதனை கவரில் போட்டு காவல் நிலையம் கொண்டு சென்ற சம்பவம் தான் இப்போது அப்பகுதியில் பேசுப்பொருளாக இருக்கிறது. சித்தூர் அருகே உள்ள ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த 53 வயதான ரவிச்சந்திரன் என்பவருக்கும் 50 வயதான வசுந்தரா என்பவருக்கும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

குடும்ப தகராறு

குடும்ப தகராறு

அவர்களது 20 வயதே ஆன ஒரே மகன் தற்போது வேலைக்குச் சென்று வரும் நிலையில் தம்பதியினர் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக வசுந்தராவும் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநலம் குன்றி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அடிதடி வரை சென்று அறையில் இன்று மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் அதிகமாகி உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வசுந்தரா ரவிச்சந்திரன் தலையில் கட்டையால் அடித்து உள்ளார்.

கணவனின் தலையை அறுத்த மனைவி

கணவனின் தலையை அறுத்த மனைவி


எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து மயங்கிக் கீழே விழுந்த ரவிச்சந்திரனை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை வசுந்தரா வறுத்து தனியே எடுத்து உள்ளார். வீடு முழுவதும் ரத்தம் சகரிக கிடக்க ரவிச்சந்திரனின் கழுத்தை மட்டும் தனியே எடுத்த வசுந்தரா ஒரு பையில் போட்டு அதனைக் கையில் பிடித்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். ஆடைகள் ரத்தக்கரை களுடன் சாலையில் சென்றதைக் கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் அதிர்ச்சி

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் வசுந்தரா கையில் வைத்திருந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் ரவிச்சந்திரனின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தலையையும் உடலையும் கைப்பற்றிய போலீசார் வசுந்தராவை அழைத்து விசாரிக்க காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது வந்த அவரது மகன் வசுந்தரா கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்த நிலையில் இருந்ததும், அப்போது ஏற்பட்ட தகராறில் கணவரை கொலை செய்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கணவனை தலையுடன் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+