For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் மைனர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Will Delhi gangrape accused get death sentence today?

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

11-ந்தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கொந்தளிப்பாக பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லியில் இனி 2 மாத காலத்தில் ஒரு பலாத்கார சம்பவம் கூட நடைபெறவில்லை எனில் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமாட்டோம். தூக்கு தண்டனை கொடுத்தால்தான் பலாத்காரமே நடக்காது என்பது நிரூபணமானால் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்றார்.

மேல்முறையீடு போகலை..

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கொந்தளிப்பாக பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லியில் இனி 2 மாத காலத்தில் ஒரு பலாத்கார சம்பவம் கூட நடைபெறவில்லை எனில் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமாட்டோம். தூக்கு தண்டனை கொடுத்தால்தான் பலாத்காரமே நடக்காது என்பது நிரூபணமானால் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்றார்.

English summary
The four accused in the Delhi gangrape, Mukesh, Pawan Gupta, Vinay Sharma and Akshay Thakur who were found guilty on 11 counts, including gang rape, murder, attempt to murder and kidnapping, will hear their quantum of punishment today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X