For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறையாவது நாகாலாந்துக்கு பெண் எம்எல்ஏ கிடைப்பரா?

நாகாலாந்தில் 12 சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த தேர்தலில் 5 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

    டெல்லி: மலைபாங்கான பகுதியான நாகாலாந்தில் களத்தில் உள்ள 5 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்களா என்பது முக்கியமானதாக உள்ளது.

    நாகாலாந்தில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே கடந்த 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 195 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் உள்ளனர்.

    விடி-யூ க்ரோனு (திமாபூர்-3) மற்றும் மங்க்யாங்புலா (நோக்சென்) ஆகியோர் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். ரகீலா (துவாங்சாங் சாதர்-2) பாஜக சார்பிலும் ஆவான் (அபோய் தொகுதி) கோன்யாக் தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி சார்பிலும், ரேகா ரோஸ் துக்ரு (சிசாமி தொகுதி) சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளனர்.

    எனினும் மாநிலத்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி எந்த பெண் வேட்பாளரையும் இந்த முறை நிறுத்தவில்லை. இந்த 5 பெண்களில் 4 பேர் மட்டுமே முதல் முறையாக போட்டியிட்டுள்ளனர்.

    12 தேர்தல்கள்

    12 தேர்தல்கள்

    ரகீலா மட்டும் கடந்த தேர்தலில் தற்போது போட்டியிடும் துவாங்சாங் சாதர்-2 தொகுதியிலேயே போட்டியிட்டு 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். மாநிலம் உருவாகி 54 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 12 சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன.

    ஆர்வம் இல்லை

    ஆர்வம் இல்லை

    எனினும் ஒரு பெண் கூட எம்எல்ஏவாக இருந்ததில்லை. இதற்கு காரணம் பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சாதனை பெறுவரா?

    சாதனை பெறுவரா?

    எனினும் இந்த முறை 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் 5 பேரில் ஒருவராவது ஜெயித்துவிட்டால் நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ என்ற சாதனையை பெறுவர். இந்த சாதனை பெறுவரா அல்லது வழக்கம் போல் ஆண் வேட்பாளர்களே வெற்றி பெறுவரா என்பதை பார்ப்போம்.

    கானல் நீராகிவிடும்

    கானல் நீராகிவிடும்

    மேலும் நாகாலாந்து மக்கள் முன்னணி தற்போது ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி எந்த பெண் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஒரு வேளை இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண் எம்எல்ஏ கனவு கானல் நீராகி விடும்.

    English summary
    Even after 54 years of statehood and 12 assembly elections, Nagaland is yet to see any woman representative in the Assembly. This time 5 women candidates are in the fray. Can they win?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X