டெல்லி திரும்பினார் மோடி... கருணாநிதியைப் பார்க்க வருவாரா?
Recommended Video

டெல்லி: ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்றே நாடு திரும்பி விட்டாலும் கூட அவர் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க வருவாரா என்பதில் இதுவரை தெளிவான நிலை தெரியவில்லை.
பிரதமர் நரேந்தரி மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ருவாண்டாவுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். 2 நாள் அங்கு இருந்தார். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின்போது சீனா, ரஷ்யா அதிபர்களுடன் அவர் பேச்சும் நடத்தினார்.

நேற்று அவர் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க சென்னை வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது கருணாநிதி ஓரளவு நல்ல உடல் நலத்தோடு இருந்தார். பேச முடியாத நிலையிலும் கூட பிரதமரை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதி மிகுந்த மோசமான உடல் நலத்துடன் உள்ளார். காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியைப் பார்க்க பிரதமர் மோடி வருவாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வந்து கருணாநிதி உடல் நலம் விசாரிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications