அபுதாபியில் இருந்து மிக்ஸியில் தங்கம் கடத்தி வந்த பெண் கைது - வீடியோ
அபுதாபியில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பெண் ஒருவர், மிக்ஸியில் தங்கத்தைக் கடத்தி வந்ததை வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபத்: அபுதாபியில் இருந்து மிக்ஸியில் தங்கம் கடத்தி வந்த பெண்ணை ஹைதராபாத் விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் அபுதாபியில் இருந்து மிக்ஸி கொண்டு வந்துள்ளார்.

அதனைக் கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத்துறை போலீசார், அப்பெண்ணிடம் இருந்த மிக்ஸியை பறிமுதல் செய்து, சோதனை செய்து பார்த்ததில் மின்மோட்டர் இருந்த இடத்தில் 1.3 கிலோ தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications