நர்ஸ் அறைந்த வேகத்தில் கீழே விழுந்து குழந்தையையும், உயிரையும் இழந்த பெண்

Subscribe to Oneindia Tamil

ரோதக்: ரோதக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியை நர்ஸ் ஒருவர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து பலியானார்.

ஹரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் நீலம்(25) என்ற நிறைமாத கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலையில் இருந்து அவருக்கு பிரசவ வலி இருந்துள்ளது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு பணிக்கு வந்த நர்ஸ் ஒருவர் நீலத்தை திட்டியதுடன் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

நர்ஸ் அறைந்த வேகத்தில் கீழே விழுந்த நீலம் தரையில் படுத்தபடி குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பிறகு நீலமும் இறந்துவிட்டார். இதையடுத்து நீலமின் உறவினர்கள் இறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு போலீசார் அந்த நர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி நீலமின் தாய் சரோஜ் ராணி கூறுகையில்,

அந்த நர்ஸ் என் மகள் இருந்த வார்டுக்குள் நுழைந்ததில் இருந்து அவரை திட்டிக் கொண்டிருந்தார். அதன் பிறகு என் மகளை அறைந்தார். குழந்தை பெற ஒரு டேபிள் ஒதுக்குமாறு பலமுறை கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனை பாதுகாவலர்கள் என்னை தாக்கினர் என்றார்.

நீலமின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இதே மருத்துவமனை முன்னாள் முதல்வர் ஹுகம் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. அதன் பிறகு அவர் பிப்ரவரி மாதம் 26ம் தேதி இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+