For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 முகங்கள்.. 2 நுரையீரல்கள்.. வாயில் சிகரெட்..அப்படியே மலைத்து போய் பீச்சில் நின்ற மக்கள்.. சபாஷ்..

ஒடிசா கடற்கரையில் புகையிலை ஒழிப்பு தினம் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று, ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது... இது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

வருஷந்தோறும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.-. இதையடுத்து, சிகரெட் பிடிப்பதன் தீமைகளை பலரும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

World No Tobacco Day Sudarsan Pattnaiks Sand Sculpture

புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி, சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பிலும் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் பிரமாண்டமான கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதுதான் இணையத்தை கொள்ளை கொள்ள வைத்து வருகிறது.

இதற்கு காரணம், இரண்டு முகங்களுடன், இரண்டு நுரையீரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான்.. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார் பட்நாயக்..

பெருந்தொற்று காலத்தில் மக்கள் புகைபிடிக்க வேண்டாம் என்றும், இந்த மணல் சிற்பத்தை 5 டன் மணலில் 6 மணி நேரத்தில் உருவாக்கியதாகவும் சொல்லி, பட்நாயக் மேலும் வியக்க வைக்கிறார்.

English summary
World No Tobacco Day Sudarsan Pattnaiks Sand Sculpture
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X