ஜஸ்ட் ஏழு மாம்பழம்தான்.. இதுக்கு இந்த தம்பதி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. வாயை பிளக்கும் மக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்தில் உள்ள 7 மாம்பழங்களை பாதுகாக்க 4 நாய்கள், 6 பாதுகாவலர்களை அதன் உரிமையாளர் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாம்பழத்தை திருடர்கள் திருடி சென்றதால இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார்கள். அவை தற்போது பழத்தோட்டங்களாக அவை மாறி உள்ளன. அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு தெரியாது.
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனையானது. அந்த மாம்பழம் தனது தோட்டத்தில் இருப்பதை இந்த ஆண்டு தான் அறிந்திருக்கிறார்.

6 நாய்கள்
இதனால் தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இவர்கள் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தை பாதுகாக்க 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு திருடர்கள் இந்த பழங்களை திருடி சென்றதால் இந்த முறை பாதுகாப்பு ஆட்களை நிறுத்தி உள்ளதாக கூறுகிறார் சங்கல்ப் பரிஹார்.

இந்த முறை பாதுகாப்பு
இதுபற்றி சங்கல்ப் பரிஹார் கூறும் போது. "கடந்த வருடம் எங்கள் தோட்டத்தில் திருடர்கள் புகுந்து விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடிவிட்டார்கள்,. இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்கும். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளேன் என்றார்.

சென்னையில்
இந்த மாங்கன்றுகள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு. சென்னையில் ரயிலில் ஒரு மனிதரை சந்தித்தேன், எனக்கு இரண்டு அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ஆரம்பத்தில், எனக்கு இந்த மாம்பழ வகை குறித்து தெரியாது. மரக்கன்றுகளை கொடுத்தவரின் தயாராரான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைத்து வருகிறேன்.

விதை முக்கியம்
இந்த மாம்பழ வகை குறித்து அறிந்த சில திருடங்கள் கடந்த ஆண்டு திருடி சென்றுவிட்டார்கள், இந்த ஆண்டு, பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்துள்ளோம். எங்களுக்கு மாம்பழங்களை விற்கும் திட்டம் இல்லை. விதைகளை பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்க போகிறோம்" என்றார்

மியாசாகி மாம்பழங்கள்
ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் 'சூரியனின் முட்டை' என்று அழைக்கப்படுகிறது ஒவ்வொரு மாம்பழமும் தலா 21,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும் அவை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை. மிகவும் அதீத சுவை கொண்டவை. சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications