எடியூரப்பா எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

  டெல்லி: நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கர்நாடக முதல்வராக எடியூரப்பா எந்த விதமான முடிவுகளும் எடுக்க கூடாது என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது.. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

  Yeddyurappa should not take any action as a CM until he proves his majority says, SC

  இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

  இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.

  இதனால் நாளை 4 மணிக்கு எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதுவரை அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு துறையும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடக டிஜிபிதான் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

  நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கர்நாடக முதல்வராக எடியூரப்பா எந்த விதமான முடிவுகளும் எடுக்க கூடாது என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். முக்கியமாக பாதுகாப்பு, டிரான்ஸ்பர், என எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yeddyurappa should not take any action as a CM until he proves his majority says, SC.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற