டச்சு பெண்ணை பலாத்காரம் செய்த யோகா ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

Yoga teacher nabbed for raping Dutch tourist in Goa
பனாஜி: கோவாவில் டச்சு நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த யோகா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் வாடகை வீடு ஒன்றில் 25 வயது டச்சு நாட்டு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் கிருஷ்ணா சர்மா என்பவரிடம் யோகா கற்றுவந்தார்.

இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் நேற்று அனுஜாவில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். விருந்து முடிந்ததும், அந்த பெண் யோகா ஆசிரியர் கிருஷ்ணா சர்மாவின் வாகனத்தில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சென்ற சர்மா அந்த பெண்ணை பலவந்தமாக அவர் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

பலாத்காரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட டச்சு நாட்டு பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை அடுத்து போலீசார் சர்மாவை தேடினர். இந்நிலையில் மும்பைக்கு தப்பித்து ஓட தாபோலிம் விமான நிலையத்திற்கு சர்மா சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

சர்மா உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+