உத்தர பிரதேசத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா?
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா மறைமுகமாக கூறி வந்தார். இதனால் அவரை முதல்வராக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று எக்சிஸ் போல் முடிவுகள் கூறும் நிலையில், அக்கட்சி யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் பாஜக போட்டியிட்டது நினைவிருக்கலாம். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் இப்படி ஒரு முடிவை எடுத்து தேர்தலை சந்தித்தனர். அதாவது, மோடியை முன்னிருத்தியே இத்தேர்தலும் சந்திக்கப்பட்டது.

எனவே நாளை ரிசல்ட் பாஜகவுக்கு சாதகமாக வந்தால், கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்ற யோகி ஆதித்யாநாத், பாஜகவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா மறைமுகமாக கூறி வந்தார். இதனால் அவரை முதல்வராக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, மேனகா காந்தியின் மகனும், எம்.பியுமான வருண்காந்தியை முதல்வராக்க பாஜகவில் ஒரு பிரிவினர் முயன்று வருகிறார்கள்.
இதில் ஆதித்யநாத்துக்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவர் அவ்வப்போது மதம் சார்ந்த சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications